புதுடெல்லி: Paytm வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்சியான செய்தி இருக்கிறது. நீங்கள் ஒரு Paytm வாடிக்கையாளராக இருந்தால், 50 கோடி வரை கேஷ்பேக் வெல்வதற்கனா வாய்ப்பு உங்களுக்கு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இ-காமர்ஸ் நிறுவனமான Paytm இன்று (வெள்ளிக்கிழமை) டிஜிட்டல் இந்தியாவில் ஆறு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனால் இந்த ​​நிறுவனம் நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்காக கேஷ்பேக் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இதற்காக ரூ .50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் கேஷ்பேக் கிடைக்கும்:
டிஜிட்டல் இந்தியாவின் ஆறு ஆண்டுகள் நிறைவடையவதை ஒட்டி, தனது வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் வெல்ல சிறப்பு சலுகையை வழங்க உள்ளது. இந்த சலுகையின் ஒரு பகுதியாக, Paytm செயலி மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இந்தியாவில் உள்ள வணிகர்கள் மற்றும் நுகர்வோருக்கு கேஷ்பேக் வழங்கப்படும் என்று Paytm தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இந்த மாவட்டங்களில் பிரச்சாரம் தொடங்கும்:
இந்த பிரச்சாரத்தை நாட்டின் பல மாவட்டங்களில் தொடங்கப்போவதாகவும் Paytm நிறுவனம் தெரிவித்துள்ளது. Paytm நிறுவனத்தின் இந்த திட்டம் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.


இந்த சலுகையை நாட்டில் உள்ள சுமார் 200 மாவட்டங்களில் தொடங்கப்போவதாகவும் Paytm தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


ALSO READ | LPG Cylinder Offer: 10 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்; பேடிஎம் டக்கரான ஆஃபர்


Paytm நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் சேகர் சர்மா, "தனது டிஜிட்டல் இந்தியா (Digital India) திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இந்தியா அடைந்துள்ளது. இது தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் அனைவருக்கும் சரியான அதிகாரம் அளிக்கிறது. இந்த நோக்கம் நாட்டின் வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதாகும். இந்த Paytm கேஷ்பேக் சலுகையின் மூலம், இந்தியாவின் வளர்ச்சியின் மையத்தில் இருக்கும் நிறுவனத்துடன் தொடர்புடைய சிறந்த வணிகர்களை அடையாளம் காண நாங்கள் முயற்சிப்போம். இந்த சிறந்த வணிகர்கள் டிஜிட்டல் இந்தியா முயற்சியை வெற்றிகரமாக ஆக்கியுள்ளனர்" என்றார்.


கேஷ்பேக் தவிர, பரிசு பெற வாய்ப்பு:
கேஷ்பேக் தவிர, தீபாவளிக்கு முன்பு Paytm பயன்பாட்டின் மூலம் அதிக பரிவர்த்தனை செய்யும் வணிகர்களுக்கும் இலவச சவுண்ட்பாக்ஸ்கள் மற்றும் IoT சாதனங்கள் வழங்கப்படும்.


ஜூலை 1, 2015 அன்று நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி டிஜிட்டல் இந்தியா திட்டத்தைத் தொடங்கினார். ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் டிஜிட்டல் வசதி ஏற்படுத்துவது, டிஜிட்டல் அறிவை உயர்த்துவது மற்றும் டிஜிட்டல் முறையில் அதிகாரம் பெற்ற சமூகமாகவும் மாற்றுவதை  நோக்கமாகக் கொண்டு டிஜிட்டல் இந்தியா உருவாக்கப்பட்டது.


ALSO READ | LIC பாலிசிதாரர்களுக்கு நல்ல செய்தி: LIC Paytm இணைவதால் எளிதாகின்றன கட்டண முறைகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR