ஆதார் - பான் இணைக்காதவர்களுக்கு மத்திய அரசு வைத்திருக்கும் ’செக்’..!
ஆதார் - பான் எண் இணைக்க மார்ச் 31 ஆம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த காலவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது என கூறப்படுகிறது. இந்நிலையில், ஆதார் - பான் எண் இணைக்காதவர்களுக்கு மத்திய அரசு செக் வைத்திருக்கிறது.
பல முறை அறிவுறுத்தியிருக்கிறது. ஒருவேளை ஆதார் மற்றும் பான் எண் ஆகியவற்றை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்காதவர்களுக்கு சில நடைமுறை சிக்கல்கள் காத்திருக்கின்றன. ஆதாருடன் இணைக்கப்படாத பான் எண்கள் நிரந்தரமாக செயலிழந்துவிடும். அவற்றை மீண்டும் ஆக்டிவேட் செய்ய விரும்பினால் மிகப்பெரிய தொகையை கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.
பான்-ஆதார் இணைப்பு ஏன் முக்கியமானது?
பான்-ஆதார் இணைப்பு என்பது பல்வேறு நிதிச் சேவைகள் மற்றும் முதலீடுகளுக்கான வாடிக்கையாளரின் விவரங்களை தெரிந்துகொள்ள (KYC) மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஒருவரே இரண்டு மூன்று பான் அட்டைகள் வைத்திருப்பதை களையெடுக்க இந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. போலி பான் எண்கள் மூலம் சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டிருப்பதால், இதனை முற்றிலும் போக்க ஆதார் - பான் எண் இணைப்பு என்பது அவசியமாக்கப்பட்டுள்ளது.
ஒருவரின் பான் எண் செயலிழந்தால், அவரால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. மேலும், நிலுவையில் உள்ள ஐடிஆர்கள் மற்றும் வருமான வரி ரீஃபண்ட்கள் கிடைக்காது. மேலும், பான் இல்லாமல் ஐடிஆர்களை தாக்கல் செய்யும் நபர்கள் அதிக விகிதத்தில் வரி செலுத்த வேண்டும். பங்குச் சந்தைகளில் கூட, SEBI விதிமுறைகளின்படி, அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் செல்லுபடியாகும் PAN எண்ணை வைத்திருப்பது கட்டாயமாகும்.
பான்-ஆதார் இணைக்க யார் தேவையில்லை?
அஸ்ஸாம், ஜம்மு காஷ்மீர் மற்றும் மேகாலயாவில் வசிக்கும் நபர்களுக்கு பான்-ஆதார் இணைப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை பெறாதவர்கள் மற்றும் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.
ஆதார்-பான் இணைப்பு: கட்டணம் & அபராதம்
தற்போதைய நிலவரப்படி, பான்-ஆதார் இணைக்க தனிநபர்கள் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும். ஜூன் 30, 2022 வரை, இந்த அபராதம் ரூ. 500 ஆக இருந்தது, இது ஜூலை 1, 2022 முதல் அபராதம் இரட்டிப்பாக்கப்பட்டு ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஆன்லைனில் ஆதார்-பான் இணைப்பு: ஆன்லைனில் பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது எப்படி?
உங்கள் பான்-ஆதாரை நீங்களே இணைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்-
* வருமான வரி மின்-தாக்கல் செய்யும் https://www.incometax.gov.in/ இணையதளத்தைப் பார்வையிடவும்.
* முகப்புப் பக்கத்தின் இடது பக்கத்தில் கிடைக்கும் ‘விரைவு இணைப்புகள்’ என்ற விருப்பத்தைக் கண்டறியவும்.
* 'லிங்க் ஆதார்' விருப்பத்தை கிளிக் செய்யவும்.
* தேவையான விவரங்களை உள்ளிடவும் - பான் கார்டு எண், ஆதார் எண் மற்றும் பெயர்.
* இந்தத் தகவலை வழங்கிய பிறகு, உங்களுக்கு ஒரு OTP அனுப்பப்படும்.
* OTP ஐ உள்ளிடுங்கள்,
* உங்கள் ஆதார் மற்றும் பான் இணைக்கப்படும்.
மேலும் படிக்க | NRI ஆதார் அட்டைக்கு எப்படி விண்ணப்பிப்பது? முழு செயல்முறை இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ