ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம், அரசின் கருவூல அலுவலகங்களுக்கு நேரில் சென்று, தாங்கள் உயிருடன் இருப்பதற்கான உயிர் சான்றிதழ் அல்லது ஆயுள் சான்றிதழை மின்னணு முறையில் பதிவு செய்ய வேண்டும். அரசின் சேவை மையங்கள், வங்கிகள், ஆகியவற்றில் இந்த மின்னணு  சான்றிதழ் (Digital Life Certificate) வழங்கப்பட்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அக்டோபர் 1, 2021 முதல், ஓய்வூதியத்தின் புதிய விதி அமலுக்கு வரும் நிலையில்,  80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஓய்வூதியதாரர்கள் 1 அக்டோபர் முதல் 30 நவம்பர் 2021 வரை ஓய்வூதியத்திற்கான உயிர்ச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 80 வயதுக்குட்பட்ட ஓய்வூதியதாரர்கள் நவம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை உயிர்ச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். 


மத்திய அரசின் ஜீவண் பிரமான் திட்டத்தின் கீழ், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மூலமாக, மின்னணு உயிர் வாழ் சான்றிதழை (Life Cetificate) தபால் அலுவலகத்தின் மூலம் பெறலாம். 


ALSO READ | மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தவும்: உச்ச நீதிமன்றம் காட்டம்


ஓய்வூதியர்கள் தங்கள் பகுதியில் உள்ள தபால்காரரிடம் ஆதார் (aadhaar), செல்போன் எண், ஓய்வூதிய கணக்கு எண் போன்ற விபரங்களை தெரிவித்து, பயோ மெட்ரிக் (Bio-Metric) முறையில் கைவிரல் ரேகை பதிவு செய்தால், சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்ச் சான்று கிடைக்கும். 


ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களுடைய மின்னணு உயிர்வாழ் சான்றிதழை, jeevanpramaan.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொண்டு ஓய்வூதியர்கள் அனைவரும் தபால்துறையின் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


விண்ணப்பிக்கும் முறை
உயிர் சான்றிதழ் பெற விண்ணப்பத்திற்கு, முதலில் உங்கள் மொபைல் எண்ணிலிருந்து 7738299899  என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் அருகில் உள்ள ஜீவன் பிரமான் கேந்திரா, அதாவை சான் றிதழ் தரும் மையம் குறித்த தகவல்களை பெறலாம். 'JPL <PIN Code>' என SMS செய்தால், குறிப்பிட்ட அஞ்சல் குறியீட்டு எண் கொண்ட பகுதிக்கு அருகிலுள்ள ஜீவன் பிரமான் மையங்களின் பட்டியல் கிடைக்கும். இந்தப் பட்டியலின் உதவியுடன், உங்களுக்கு அருகிலுள்ள மையத்தைத் தேர்வு செய்யலாம். அங்கு சென்று உங்கள் டிஜிட்டல் உயிர்ச் சான்றிதழைப் பெறலாம்.


ALSO READ | தமிழகத்தில் அக்டோபருக்குள் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போட திட்டம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR