தமிழகத்தில் அக்டோபருக்குள் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போட திட்டம்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், கோவிட் தொற்றுநோய் பிடியின் பாதிப்புகளை தவிர்க்கவும் நாடு முழுவதும், கொரோனா தடுப்பூசி இயக்கம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 20, 2021, 01:58 PM IST
தமிழகத்தில் அக்டோபருக்குள் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போட திட்டம் title=

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், கோவிட் தொற்றுநோய் பிடியின் பாதிப்புகளை தவிர்க்கவும் நாடு முழுவதும், கொரோனா தடுப்பூசி இயக்கம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் மெகா தடுப்பூசி முகாமை அரசு நடத்தி வருகிறது. கடந்த இரு ஞாயிற்றுகிழமைகளிலும் (செப்டம்பர் 12 &19) மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 

இந்நிலையில், சென்னை அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த  மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாடு அரசு தரப்பில் இதுவரை 3.97 கோடி தடுப்பூசிகளும், தனியார் மருத்துவமனைகள் மூலம் 74 லட்சம் தடுப்பூசிகளும் என மொத்தமாக 4.2 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன’ என்றார். மேலும், அக்டோபர் மாதத்துக்குள் தமிழ்நாட்டில் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

ALSO READ | தமிழகத்தில் வரும் 19ம் தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்..!!

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள தூத்துக்குடி, நெல்லை, கடலூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறினார். தமிழ்நாட்டில் சில டெல்டா மாவட்டங்களிலும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும் சென்னையை சுற்றிய சில பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக தொற்று அதிகரித்துள்ளதால், அதனை இதனை கட்டுப்படுத்தவும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள் என மக்கள் வசதிக்கேற்ற இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: 1 கோடி டோஸ் கூடுதல் தடுப்பூசிகள் தேவை: மத்திய அமைச்சருக்கு மா.சுப்பிரமணியன் கடிதம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News