திருப்பதி திருமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா காரணமாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட திருப்பதி கோயிலில் தற்போது பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலில் 6000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி தற்போது 50,000 பக்தர்கள் வரை திருப்பதி (Tirupati) சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


Also Read | Tirupati: திருமலையில் நடந்த முதல் திருமணம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?


கொரோனா (Coronavirus) பரவல் நாடு முழுவதும் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரேனா இரண்டாவது அலை உருவாக வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. சில நகரங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, பகல் நேரக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவைகள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், திருப்பதியில் (TTD) இன்று முதல் (24.03.21) பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதியில் தெப்ப உற்சவம் தொடங்க உள்ள நிலையில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், திருமலையில் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்ற அச்சத்தின் காரணமாக இன்று முதல் வருகிற 28ஆம் தேதி வரை திருப்பதியில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தேவஸ்தானம் (Tirumala Tirupati Devasthanams) அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக திருமலையில் கடுமையான கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR