EPF-ல் பெரிய மாற்றம்: இனி ஊழியர்களிடம் இருக்கும் 2 PF கணக்குகள், விவரம் இதோ
மாத ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு ஒரு மிக முக்கியமான செய்தி உள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் (EPF) விதிகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
PF Account News Update: மாத ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு ஒரு மிக முக்கியமான செய்தி உள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் (EPF) விதிகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. EPF-ல் ஒரு நபரின் பங்களிப்பு ஒரு நிதியாண்டில் ரூ .2.5 லட்சத்திற்கு மேல் இருந்தால், அவர் இந்த நிதி ஆண்டு 2021-22 முதல் இரண்டு தனி PF கணக்குகளை பராமரிக்க வேண்டும். மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
PF கணக்குகள் இரு கணக்குகளாக பிரிக்கப்படும்
அறிவிப்பின் படி, தற்போதுள்ள வருங்கால வைப்பு நிதி கணக்குகள் (PF Accounts) இரண்டு தனி கணக்குகளாக பிரிக்கப்படும். பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி கணக்கிட தனி பிஎஃப் கணக்கு திறக்கப்படும்.
CBDT யின் அறிவிப்பின்படி, மார்ச் 31, 2021 வரை எந்தப் பங்களிப்பிற்கும் வரி செலுத்த வெண்டாம். ஆனால் 2020-21 நிதியாண்டுக்குப் பிறகு PF கணக்குகளில் பெறப்படும் வட்டிக்கு வரி விதிக்கப்படும், இது தனித்தனியாக கணக்கிடப்படும்.
ALSO READ: புதிய ஊதியக் குறியீடு: சம்பளம், ஓவர்டைம் விதிகளில் முக்கிய மாற்றம்..!!
1 ஏப்ரல் 2022 முதல் புதிய விதிகள் பொருந்தும்
CBDT படி, இந்த விதிகள் ஏப்ரல் 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும். 2021-22 நிதியாண்டில், உங்கள் PF கணக்கில் ரூ .2.5 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், அந்த கூடுதல் தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கு நீங்கள் வரி செலுத்த வேண்டும்.
அடுத்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போதும் இந்த தகவலை நீங்கள் அளிக்க வேண்டும். ஒரு நபரின் கணக்கில் அவரது முதலாளி பங்களிக்கவில்லை என்றால், இந்த வரம்பு அவருக்கு ரூ .5 லட்சமாக இருக்கும்.
தனியார்-அரசு ஊழியர்களுக்கு தனித்தனி வரம்பு
ஆண்டுக்கு ரூ .2.5 லட்சம் என்ற வரம்பு தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த வரம்பு அரசு ஊழியர்களுக்கு அல்ல. அரசு ஊழியர்களுக்கு EPF மற்றும் VPF-க்கான பங்களிப்பு வரம்பு ரூ .5 லட்சம் ஆகும். அதாவது அரசு ஊழியரின் EPF மற்றும் VPF கணக்கில் ஆண்டுக்கு ஐந்து லட்ச ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டால், அவர்கள் அந்த கூடுதல் தொகைக்கு வரி செலுத்த வேண்டும்.
ALSO READ: EPFO Good News: PF கணக்கில் வரவுள்ளது 8.5% வட்டித் தொகை, விரைவில் அறிவிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR