புதிய ஊதியக் குறியீடு: சம்பளம், ஓவர்டைம் விதிகளில் முக்கிய மாற்றம்..!!

New Wage Code Update:  புதிய வரைவுச் சட்டத்தில், 15 முதல் 30 நிமிடங்களுக்குள் கூடுதலாக வேலை செய்தாலே அதை ஓவர்டைமாக சேர்க்க வேண்டும் என்ற விதி உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 23, 2021, 03:14 PM IST
  • அக்டோபர் 1 முதல் புதிய ஊதியக் குறியீடு அமலுக்கு வரும்
  • புதிய விதிகளுக்குப் பிறகு சம்பள அமைப்பு மாறும்.
  • விடுமுறைகள், வேலை நேரங்களிலும் மாற்றம்.
புதிய ஊதியக் குறியீடு: சம்பளம், ஓவர்டைம் விதிகளில் முக்கிய மாற்றம்..!! title=

New Wage Code Update:  அக்டோபர் 1 முதல் நாடு முழுவதும் புதிய ஊதிய குறியீடு விதிகளை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. முன்னதாக ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமல்படுத்தப்பட இருந்தது. பின்னர் ஜூலை மாதத்தில் அமல்படுத்துவதகா கூறப்பட்ட நிலையில், தற்போது அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

அக்டோபர் 1 முதல் சம்பள அமைப்பிலும் மாற்றம்

அதாவது, அக்டோபர் 1 முதல், சம்பளம் பெறும் மக்களின் சம்பள அமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தைக் காணலாம். பணியாளர்களுக்கு கையில் கிடைக்கும் சம்பளம் (Take Home Salary ) குறையலாம். இது தவிர, புதிய தொழிலாளர் குறியீட்டில் வேலை நேரம், ஓவர்டைம், ஓய்வு நேரம் போன்றவை தொடர்பான விதிகளும் மாற்றப்பட்டுள்ளன. 
புதிய ஊதியக் குறியீடு என்றால் என்ன?

29 தொழிலாளர் சட்டங்களை இணைத்து அரசாங்கம் 4 புதிய ஊதியக் குறியீடுகளைத் தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 2019 அன்று பாராளுமன்றம் மூன்று தொழிலாளர் குறியீடுகள், தொழில்துறை உறவுகள், வேலை பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் மற்றும் சமூக பாதுகாப்பு தொடர்பான விதிகளை மாற்றியது. இந்த விதிகள் 2020 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டன

1- ஊதியக் குறியீடு விதிகள்
2- தொழில்துறை உறவுக் குறியீடு விதிகள்
3- தொழில் துறையில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் (OSH)
4- சமூக பாதுகாப்பு குறியீடு விதிகள்

ALSO READ | இந்த ‘1’ ரூபாய் காயின் இருந்தால், ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகலாம்..!!

நான்கு குறியீடுகளும் ஒரே நேரத்தில் அமல்படுத்தப்படும்

புதிய ஊதியக் குறியீடு விதிகளின்படி, ஊழியர்களின் அடிப்படை சம்பளம் (Basic Salary) மொத்த சம்பளத்தில் அல்லது நிறுவனத்திற்கான செலவில் (CTC) 50% ஆக இருக்க வேண்டும். இதை விட குறைவாக இருக்கக்கூடாது. தற்போது, ​​பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை குறைவாக வைத்திருக்கின்றன. மேலும் கொடுப்பனவுகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிக கொடுப்பனவுகளை வழங்குவதால், நிறுவனத்தின் சுமை குறைகிறது ஏனென்றால், வைப்பு நிதிக்கான நிறுவனம் மற்றும் ஊழியர்களின் பங்கு, அடிப்ப்டை சம்பளத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது.

நீங்கள் 15 - 30 நிமிடங்கள் வேலை செய்தாலே ஓவர் டைம் கிடைக்கும்.

புதிய வரைவு சட்டத்தில், 15 முதல் 30 நிமிடங்களுக்குள் கூடுதல் வேலை செய்தாலே, அதனை ஓவர்டைம் காக கணக்கிடும் வகையில் விதி உள்ளது. தற்போதைய விதியின்படி, 30 நிமிடங்களுக்கும் குறைவான கூடுதல் வேலை நேரம் ஓவர்டைமாக கருதப்படவில்லை. வரைவு விதிகளில், எந்த ஊழியரையும் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய வைக்க முடியாது. ஒவ்வொரு ஐந்து மணி நேரத்திற்குப் பிறகும் அவருக்கு 30 நிமிட ஓய்வு கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ALSO READ | Old is Gold: இந்த ‘25’ பைசா உங்களிடம் இருந்தால், ₹1.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்

சம்பள அமைப்பு முற்றிலும் மாறும்

ஊதிய குறியீடு சட்டம், 2019 அமல்படுத்தப்பட்ட பிறகு, ஊழியர்களின் சம்பள அமைப்பு முற்றிலும் மாறும். ஊழியர்களின் டேக் ஹோம் சாலரி குறையும், ஏனென்றால் அடிப்படை ஊதியத்தை அதிகரிப்பதன் மூலம், ஊழியர்களின் பிஎப்  பங்களிப்பும், நிறுவனத்தின் பிஎப் பங்களிப்பும் அதிகரிக்கும்.  அதாவது, அவர்களின் எதிர்காலம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். பிஎஃப் உடன், கிராச்யுட்டி (Gratuity) பங்களிப்பும் இருக்கும் அதிகரிக்கும். அதாவது, கையில் கிடைக்கும் சம்பளம் குறையும் என்றால், அதிக பலன்கள் கிடைக்கும். ஊழியர் ஓய்வூதியத்தில் அதிக தொகையைப் பெறுவார். புதிய ஊதியக் குறியீடு அமைப்புசாரா துறை ஊழியர்களுக்கும் பொருந்தும். சம்பளம் மற்றும் போனஸ் தொடர்பான விதிகள் மாறும். 

வேலை நேரம், விடுமுறை நாட்களும் மாறும்

ஊழியர்களின் வேலை நேரம், வருடாந்திர விடுமுறை, ஓய்வூதியம், PF, வீட்டு சம்பளம், ஓய்வு தொடர்பான பலன்கள் போன்ற முக்கிய  விதிகளில் மாற்றம் உள்ளது. தொழிலாளர் சங்கம் பிஎஃப் மற்றும் வருடாந்திர விடுமுறைகள் குறித்து வைத்துள்ள கோரிக்கையில், எர்ண்ட் லீவ் ( Earned leave) 240 லிருந்து 300 ஆக உயர்த்த வேண்டும் என்று தொழிற்சங்கம் கோரியுள்ளது.

ALSO READ | தங்க ஹால்மார்க்கிங்கிற்கு எதிராக நாடு முழுவதும் நகை வியாபாரிகள் வேலைநிறுத்தம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News