கொரோனா வைரஸ் (Corona Virus) நம்மை ஆட்டிப்படைக்கும் இந்த கொரோனா காலத்தில் மக்கள் பண பரிவர்த்தனைகளுக்கு பதிலாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு (Digital Transaction) அதிக முன்னுரிமை அளிக்கிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்தகைய சூழ்நிலையில், டிஜிட்டல் கட்டணங்களை ஊக்குவிப்பதற்காக சிறிய கடைக்காரர்கள் மற்றும் மளிகைக் கடைகளை இணைக்க ஒப்பந்தத்தில் பணியாளர்களை பணியமர்த்த PhonePe முடிவெடுத்துள்ளது. டிஜிட்டல் கட்டண நிறுவனமான PhonePe அடுத்த சில நாட்களில் 10,000 பேருக்கு வேலை வழங்க திட்டமிட்டுள்ளது. தற்போது, ​​ PhonePe-ன் டிஜிட்டல் இயங்குதளத்தில் வணிகர்களை இணைக்க சுமார் எட்டாயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். நாடு முழுவதும் ஃபோன்பேவின் டிஜிட்டல் தளம் மூலம் 1.10 கோடிக்கும் அதிகமான வணிகர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.


நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள கடைக்காரர்களுக்கு டிஜிட்டல் கட்டணத்தை ஏற்றுக்கொள்வதற்கு புதிய குழுவைச் சேர்ப்பது குறித்து செயல்படுவதாக பெங்களூரைச் சேர்ந்த PhonePe தெரிவித்துள்ளது. 10,000 க்கும் மேற்பட்ட இளைஞர்களை இந்த அணியில் சேர்க்கலாம். இந்த மளிகைக் கடைகளை PhonePe For Business App-ல் கொண்டு வர விரும்புவதாகவும், அவர்களுக்கு கட்டண உறுதிப்படுத்தல், ரசீது மற்றும் இதுபோன்ற பிற வசதிகளை வழங்க விரும்புவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.


ALSO READ: India Post GDS Recruitment 2020: 5,222 காலி இடங்கள், விண்ணப்பிக்கும் விவரங்கள் உள்ளே!!


கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இந்த காலத்தில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் அளவு அதிகரித்து வருகிறது. இதைப் பயன்படுத்தி, PhonePe  நிறுவனம் மேலும் மேலும் சிறு வணிகங்களை தன்னுடன் இணைக்க விரும்புகிறது. அடுத்த 12 மாதங்களில் குறைந்தது 2.5 கோடி வர்த்தகர்களை அதன் டிஜிட்டல் தளத்துடன் இணைக்க நிறுவனம் விரும்புகிறது.


ஜூலை 2020 இல், நிறுவனம் 5.50 கோடி UPI பரிவர்த்தனைகளை செய்துள்ளது. இவற்றில், 40-50% என்பது பியர்-டு-மர்சண்ட் பரிவர்த்தனை ஆகும். ஒட்டுமொத்த UPI இயங்குதளத்தைப் பற்றி பேசுகையில், இப்படிப்பட்ட வணிக பரிவர்த்தனைகளின் பங்கு அதிகரித்து வருகிறது.


PhonePe -வின் இந்த முடிவால் அதிக நபர்களுக்கு வேலை வாய்ப்பு அமைய பெரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 


ALSO READ: IBPS Clerk 2020 Notification: வங்கியில் பணியாற்ற சிறந்த வேலை வாய்ப்பு