பிஎம் கிசான் 15வது தவணை அப்டேட்: மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா, இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த பணம் தலா ரூ.2000-2000 வீதம் 3 சம தவணைகளில் பயனாளிகளின் கணக்கிற்கு அனுப்பப்படுகிறது. இந்த பணம் டிபிடி மூலம் விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்படுகிறது. விவசாயிகளின் கணக்கில் இதுவரை 14 தவணைகள் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது 15வது தவணை அனுப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று சரிப்பார்த்துக் கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிஎம் கிசானின் 15வது தவணை எப்போது வரும்?
திட்டத்தின் விதிகளின்படி, முதல் தவணை ஏப்ரல்-ஜூலைக்கும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களுக்கும், மூன்றாவது தவணை டிசம்பர் முதல் மார்ச் வரைக்கும் வழங்கப்படுவதால், அடுத்தது அக்டோபர்-நவம்பர் மாதங்களுக்கான ரூ.2000 தவணை விவசாயிகளின் கணக்கில் நேரடியாக அனுப்ப வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இறுதி தேதிக்கான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | New Tax Regime vs Old Tax Regime முக்கிய அப்டேட்: எது அதிகம் தேர்ந்தெடுக்கப்பட்டது?


இதனிடையே 15 வது தவணையைப் பெற e-KYC செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். அதே நேரத்தில் நிலச் சரிபார்ப்பு மற்றும் வங்கிக் கணக்குடன் ஆதார் அட்டையை இணைப்பதும் கட்டாயம் ஆகும். இந்த மூன்று விஷயங்களையும் செய்யாவிட்டால், அடுத்த தவணையின் பலனைப் பெற முடியாமல் போகும். ஏதேனும் பிரச்சனை அல்லது இன்னல்கள் ஏற்பட்டால், பயனாளி PM Kisan Yojana இன் ஹெல்ப்லைன் எண்- 155261 அல்லது 1800115526 (டோல் ஃப்ரீ) அல்லது நீங்கள் 011-23381092 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


கணவன் மனைவி இருவருக்கும் பலன் கிடைக்குமா?
பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தில் கணவன்-மனைவி இருவரும் சம்மன் நிதியைப் பெற முடியுமா என்ற கேள்விகள் அடிக்கடி எழுகின்றன. கணவன் மனைவி இருவரும் இத்திட்டத்தின் பயனாளிகளாக இருக்க முடியுமா? என்றால் பலன் பெற முடியாது. ஏனெனில் அரசாங்கத்தின் விதிகளின்படி, கணவன்-மனைவி இருவரும் PM KISAN திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது. யாரேனும் ஒருவர் மட்டுமே இந்த திட்டத்தின் பலனை பெற முடியும்.


திட்டத்தின் விதிகளின்படி, ஒரு குடும்பத்தில் ஒரு உறுப்பினர் மட்டுமே அதன் பலனைப் பெற முடியும். குடும்பத்தில் உள்ள கணவன்-மனைவி இருவரும் இந்தத் திட்டத்தின் பலனைப் பெற்றிருந்தால், அவர்களிடமிருந்து அந்தத் தொகையைப் திரும்பப் பெறலாம், ஏனெனில் அத்தகையவர்கள் இந்த கிசான் சம்மன் நிதிக்கு தகுதியற்றவர்கள் ஆவார்கள். பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் பலன் ஒரு விவசாய குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்று மத்திய அரசும் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது.


eKYC எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்
* PM-Kisan இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.pmkisan.gov.in ஐப் பார்வையிடவும்.
* இதற்குப் பிறகு, முகப்புப் பக்கத்தின் வலது பக்கத்தில் உள்ள eKYC விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
* இப்போது உங்கள் ஆதார் அட்டை எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தேடு என்பதைக் கிளிக் செய்யவும்.
* அதன் பிறகு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.
* 'Get OTP' என்பதைக் கிளிக் செய்து, வழங்கப்பட்ட பெட்டியில் OTP ஐ உள்ளிடவும்.


எப்படி விண்ணப்பிப்பது
* முதலில் PM Kisan pmkisan.gov.in இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
* விவசாயிகள் கார்னர் திரையில் காட்டப்படும், நீங்கள் அந்த விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
* இப்போது புதிய விவசாயி என்ற விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம் உங்களை பதிவு செய்யுங்கள்.
* இதில், கிராமப்புற விவசாயி பதிவு அல்லது நகர்ப்புற விவசாயி பதிவு என்ற விருப்பத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
* உங்கள் ஆதார், மொபைல் எண்ணை உள்ளிட்டு உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, Get OTP என்பதைக் கிளிக் செய்யவும்.
* OTP ஐ உள்ளிட்ட பிறகு, நீங்கள் பதிவு செய்வதற்கான செயல்முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
* தொடரும் மீதமுள்ள தகவலை நீங்கள் உள்ளிட வேண்டும். இப்போது நீங்கள் ஆதார் அங்கீகாரத்திற்குச் செல்லுங்கள்.
* உங்கள் ஆவணங்களைப் பதிவேற்றி சேமி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
* உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், ஒரு செய்தி திரையில் காண்பிக்கப்படும்.


மேலும் படிக்க | ஆக்சிஸ் வங்கியில் டிஜிட்டல் கிசான் கிரெடிட் கார்டு அறிமுகம் - இதோ முழு விவரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ