8.5 கோடி பேருக்கு ஜாக்பாட்... வங்கியில் பணத்தை போட்ட மத்திய அரசு!

PM Kisan Scheme: நீண்ட நாள் காத்திருப்பான பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 14ஆவது தவணை தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் போடப்பட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jul 27, 2023, 01:39 PM IST
  • இதில், கடந்த தவணையில் வராதவர்களுக்கு ரூ. 2000 சேர்த்து வரும் என தகவல்.
  • இதில், மொத்தம் ரூ.17000 கோடிக்கு மேல் பணம் மேல் மாற்றப்பட்டுள்ளது.
  • விவசாயிகள் பொருளாதார ரீதியாக வலுவடை இத்திட்டம் உதவும்.
8.5 கோடி பேருக்கு ஜாக்பாட்... வங்கியில் பணத்தை போட்ட மத்திய அரசு! title=

Prime Minister Kisan Scheme Installment: நாட்டின் 8.5 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் கணக்குகளுக்கு பிரதமர் மோடி கிசான் திட்டத்தின்கீழ் மொத்தம் ரூ.17000 கோடிக்கு மேல் பணம் இன்று (ஜூலை 27) மாற்றப்பட்டுள்ளது. 

இந்த பணம், பிரதமர் கிசான் சம்மன் நிதியின் தவணையாக, டிபிடி மூலம் விவசாயிகளின் கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது. 14ஆவது தவணைக்கான நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளதால், மத்திய அரசு விவசாயிகளின் கணக்கில் பணம் அனுப்பியுள்ளது. இதன்போது, ராஜஸ்தானுக்கும் பிரதமர் பல திட்டங்களை பரிசாக வழங்கினார்.

விவசாயிகளின் நலன்

இந்நிகழ்ச்சியில், நாட்டின் விவசாயிகளுடன் மத்திய அரசு தோளோடு தோள் நின்று நிற்கிறது என்று பிரதமர் மோடி கூறினார். கடந்த 9 ஆண்டுகளில் விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு தொடர்ந்து முடிவுகளை எடுத்து வருகிறது என்றார். விவசாயிகளுக்கு விதை முதல் சந்தை வரை புதிய அமைப்புகளை உருவாக்கியுள்ளோம் என்றார். 14ஆவது தவணை தவிர, இதுவரை 2.6 கோடி ரூபாய் விவசாயிகளின் கணக்கில் அரசு மாற்றப்பட்டுள்ளது என்றார். இதன் மூலம் விவசாயிகள் பொருளாதார ரீதியாக வலுவடைந்துள்ளனர். 

மேலும் படிக்க | பணத்தை பணமடங்காக்கும் செல்வ மகள் சேமிப்பு திட்டம்... முதிர்வின் போது கையில் ₹64 லட்சம் கிடைக்கும்!

யூரியா விலை

யூரியாவின் விலை குறைவால் இந்திய விவசாயிகள் பிரச்சனைகளை சந்திக்க எங்களது அரசாங்கம் அனுமதிக்காது என்று பிரதமர் மோடி கூறினார். நாட்டின் ஒவ்வொரு விவசாயியும் இந்த உண்மையைப் பார்க்கிறார், அனுபவிக்கிறார் என்றார். யூரியா பாகிஸ்தானில் ரூ.800க்கும், வங்கதேசத்தில் ரூ.720க்கும், சீனாவில் ரூ.2100க்கும், அமெரிக்காவில் ரூ.3000க்கும் விற்கப்படுகிறது. இந்தியாவில் விவசாயிகளுக்கு யூரியா மூட்டை ரூ.266க்கும் விற்கப்படுகிறது. பிரதான் மந்திரி கிசான் சம்ரிதி கேந்திரா விவசாயிகளின் செழிப்புக்கு வழி வகுக்கும் என்று பிரதமர் கூறினார்.

கிராமங்கள் வளர்ச்சியடையும் போதுதான் இந்தியாவின் வளர்ச்சி ஏற்படும் என்றும், நகரங்களில் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் இந்தியாவின் கிராமங்களிலும் வழங்க அரசு செயல்பட்டு வருகிறது என்றார். இந்த முறை, அரசாங்கத்தின் பூலேக் சரிபார்ப்பு காரணமாக, PM கிசான் தவணையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 13வது தவணை கணக்கில் பணம் வராத விவசாயிகளின் சரிபார்ப்பு முடிந்த நிலையில், இந்த முறை அவர்களது கணக்கில் ரூ.4000 சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | குறைந்த வட்டியில் பர்சனல் லோன் வாங்க... இந்த வங்கிகள் சிறப்பான தேர்வாக இருக்கும்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News