PM Kisan Samman Nidhi: ஹோலி பண்டிகைக்கு முன்பே விவசாயிகளுக்கு பணம் செலுத்தப்படும்
ஹோலி பண்டிகைக்கு முன்பு மோடி அரசு, சிறு குறு விவசாயிகளுக்கு பெரிய பரிசை அளிக்கப்போகிறது. இவர்களின் வங்கிக் கணக்குகளில் இரண்டாயிரம் ரூபாய் செலுத்த உள்ளது.
புதுடெல்லி: மோடி தலைமையிலான (Modi Government) மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்கள் (Farm Bills 2020) தொடர்பாக நாட்டின் தலைநகரான டெல்லியின் எல்லையில் விவசாயிகளின் போராட்டம் (Farmers Protest) தொடந்து 100 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் மற்றும் விவசாய சங்க தலைவர்களிடையே மத்திய அரசு 11 முறை பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் இந்த பிரச்சினைக்கு எந்த தீர்வும் இதுவரை எட்டப்படவில்லை. விவசாய சட்டங்களை திருத்துவதற்கு தயார் என மத்திய அரசாங்கம் தெரிவித்தாலும், விவசாயிகள் தரப்பில் வேளாண் சட்டங்களை (Agricultural Laws) ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் பிடிவாதமாக உள்ளனர். இந்த பிரச்கனைகளுக்கிடையில், ஹோலி பண்டிகைக்கு (Holi 2021) முன் சிறு குறு விவசாயிகளுக்கு மத்திய அரசு தரப்பில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை வழங்கப் போகிறது.
பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் (PM Kisan Samman Nidhi Yojana) கீழ், எட்டாவது தவணை 2000 ரூபாயை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசாங்கம் செலுத்த உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில், மத்திய அரசாங்கம் ஆண்டுக்கு 3 தவணையாக ஒவ்வொரு தவணைக்கும் இரண்டாயிரம் ரூபாய் என மொத்தம் ஆறாயிரம் ரூபாய் செலுத்துகிறது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 11 கோடி விவசாயிகள் பயனடைகிறார்கள்.
ALSO READ | PM Kisan: பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் இரட்டை நன்மை பெற இதை செய்யுங்கள்!
அதே நேரத்தில், தற்போது பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் நன்மைகளை பயன்படுத்திக்கொள்ள ஆதார் எண் (Aadhaar Number) கட்டாயம் இருக்க வேண்டும். டிசம்பர் 1, 2019 முதல் ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது மிகவும் முக்கியமானது. அப்போதுதான் விவசாயிகள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
விவசாயியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான Pmkisan.Gov.In க்கு சென்று வலதுபுறத்தில் உள்ள Farmers Corner செல்லுங்கள். அங்கு உள்ள "New Farmer Registration" விருப்பத்தை கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். அடுத்து நீங்கள் உங்கள் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு உங்கள் பிராந்தியத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அப்பொழுது ஒரு படிவம் உங்களுக்கு முன்னால் தோன்றும். அதில் கேட்டக்கப்பட்டு உள்ள தகவலை உள்ளிட வேண்டும். மேலும், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் உங்கள் உள்ள விவசாய நிலம் தொடர்பான தகவல்களை நிரப்ப வேண்டும்.
ALSO READ | PM Kisan 8 வது தவணை எப்போது வெளியிடப்படும்? முழு விவரம் இங்கே!
நீங்கள் இந்தத் திட்டத்தில் பதிவுசெய்த பிறகு, உங்கள் கணக்கில் 2000 ரூபாய் தவணை வரவில்லை என்றால், நீங்கள் கட்டணமில்லா எண்ணை தொடர்புக்கொண்டு விவரங்களை அறிந்துக்கொள்ளலாம். விவசாயிகளுக்கு (Farmers) உதவ மத்திய வேளாண் அமைச்சகத்தால் ஹெல்ப்லைன் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. நீங்கள் PM Kisan ஹெல்ப்லைன் 155261 அல்லது கட்டணமில்லா 1800115526 எண்ணை அழைக்கலாம். அதேபோல 011-23381092 என்ற எண்ணிலும் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR