PM Kisan Scheme: புதுடெல்லி: பிரதமர் கிசான் சம்மன் நிதியின் (PM Kisan Samman Nidhi) 8 வது தவணையின் 2000 ரூபாய் 9.5 கோடி விவசாயிகளின் கணக்குகளுக்கு மத்திய அரசால் மாற்றப்பட்டுள்ளது, ஆனால் இன்னும் சுமார் 7 கோடி விவசாயிகளின் கணக்கில் பணம் மாற்றப்படவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

PM Kisan Scheme இன் கீழ் கிடைத்த தரவுகளின்படி, ஏழாவது தவணை வரை, 3.29 கோடி விவசாயிகளுக்கு (PM Kisan) இதுவரை நிதி வழங்கப்படவில்லை. இதன் காரணமாக இந்த விவசாயிகளின் கணக்கில் பணம் ஏற்றப்படவில்லை. அந்தவகையில் உங்கள் கணக்கில் பணம் வரவில்லை என்றால், உடனடியாக இந்த முறையில் சரிபார்க்கவும்.


ALSO READ | PM Kisan Yojana: இலவசமாக கிசான் கிரெடிட் கார்டை எவ்வாறு பெறுவது!


பணம் வந்துவிட்டதா? இல்லையா?
பிஎம் கிசான் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/ என்பதில் சென்று நீங்களே பணம் வந்துவிட்டதா இல்லையா என்று பார்க்கலாம். இந்த முகவரிக்கு சென்று அதில், ’Farmers Corner’ என்பதை கிளிக் செய்யவும். அதில், beneficiary status அல்லது beneficiary list என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் அதில் புதிய திரை தென்படும். அதில் சென்று ஆதார் எண், மொபைல் எண் போன்ற விவரங்கள் வரும். அதைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் உங்களுக்குத் தேவையான தகவல் அதில் கிடைக்கும். ஒருவேளை உங்களது திரையில் ’FTO is generated and Payment confirmation is pending’ என்ற தகவல் குறிப்பு இருந்தால் உங்களது பணத்தை டெபாசிட் செய்யும் பணி நடந்து வருகிறது என்று அற்தம் ஆகும். 


பணம் வராவிட்டால் என்ன செய்வது?
பணம் வந்துசேரவில்லை என்றால் அரசின் ஹெல்ப் லைன் எண்களுக்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம். அதேபோல, மின்னஞ்சல் மூலமாகவும் புகார் செய்யலாம்.  PM Kisan Toll free Number: 18001155266 PM Kisan Helpline Number: 155261 PM Kisan Landline Number: 011-23381092, 23382401 PM Kisan Helpline:0120-6025109 Email முகவரி: pmkisan-ict@gov.in மூலமாகவும் புகார் செய்யலாம்.  


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR