2018 ஆம் ஆண்டுக்கான "சீயோல் அமைதி விருது" இந்திய பிரதமர் மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சியோல் அமைதி விருது என்பது 1990 ஆம் ஆண்டு கொரியாவில் உள்ள சியோல் என்ற இடத்தில் அறிவிக்கப்பட்டது. உலக நாடுகள் மத்தியில் நட்புணர்வை வளர்க்க மற்றும் அமைதியை நிலைநாட்ட உதவிய நபர்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. 


இந்நிலையில், 2018 ஆம் ஆண்டி சியோல் அமைதி விருது இந்திய பிரதமர் மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும், உலக அமைதிக்காக பிரதமர் மோடி ஆற்றிய பங்களிப்புக்காகவும், மனித மேம்பாடு மற்றும் இந்தியாவில் ஜனநாயகத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றிக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. 


இந்தியாவில் சுமார் 1.3 பில்லியன் மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை பிரதமர் மோடி கொண்டுவந்துள்ளாதாகவும் கூறியுள்ளது. இவர் தனது நாட்டின் வளர்ச்சிக்காக சர்வதேச நாடுகளுடன் தொழில்ரீதியான ஒப்பந்தங்களை செய்து வருகிறார். தனது நாட்டின் அமைதிக்காக மட்டும் அல்லாமல் உலக அமைதியை நிலைநாட்ட தொடர்ந்து உழைத்து வருபவர் மோடி என புகழாரம் சூட்டியுள்ளது சீயோல் கமிட்டி.


இந்த சீயோல் அமைதி விருது-2018 விருதை பெரும் 14 ஆவது நபராக பிரதமர் மோடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....