#FitnessChallenge-ல் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சவாலை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் இந்தியர்கள் தங்கள் உடலை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி தாங்கள் செய்யும் உடற் பயிற்சியை வீடியோவாக வெளியிடும்படி வலியுறுத்தினார். அதோடு தான் செய்யும் உடற் பயிற்சியையும் டிவிட்டரில் வெளியிட்டு இந்த சேலஞ்சை முன்னெடுக்கும் படி விராட் கோலி, சாய்னா நெஹ்வால், ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோருக்கு பரிந்துரை செய்தார். 


இதனை ஏற்றுக் கொண்ட கோலி, தான் உடற் பயிற்சி செய்யும் வீடியோவை டிவிட்டரில் பதிவிட்டார். கூடவே பிரதமர் மோடி, கேப்டன் கூல் தோனி, தனது மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோருக்கும் இந்த ஃபிட்னெஸ் சேலஞ்சை பரிந்துரைத்தார். 


கோலியின் சவாலை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த, பிரதமர் மோடி கூடிய விரைவில் வீடியோவை பதிவிடுகிறேன் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சவாலை ஏற்றுக் கொண்டு, தற்போது பிரதமர் மோடி, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். 


 



 


மேலும் கர்நாடகா முதல்வர் குமாரசாமி, 2018 காமன்வெல்த் போட்டியில் அதிக பதக்கங்கள் வாங்கிய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ராவு. 40 வயதுக்கு மேற்பட்ட துணிச்சலான ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு உடற்தகுதி குறித்து மோடி சவால் விடுத்துள்ளார்.