பழையன கழிந்து புதியன புகும் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் நாளில், புதுப்பானையில் புத்தரிசியிட்டு வெல்லம் போட்டு செய்யும் பொங்கலின் ருசியே தனிதான். வெல்லம், முந்திரி எல்லாம் சேர்த்து வைக்கப்படும் பொங்கல் நல்ல நேரத்தில் வைக்கப்படுவது வழக்கம். கூடவே பால் ஊற்றியும் பொங்கல் வைப்பார்கள். அப்போது, பொங்கல் பானையில் இருந்து பொங்கி வழியும் பால் எந்த திசையில் வழிகிறது என்பதை பொறுத்து, வரும் நாட்களில் நமக்கு ஏற்படும் நன்மை தீமைகளை உணர்ந்து கொள்ளலாம் என முன்னோர்கள் கூறியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சிவன்மலை பெட்டியில் வந்திருக்கும் நெற்கதிர்கள்; முருகப்பெருமான் உத்தரவு சொல்வது இதுதான்!


அதன்படி, இரவு முழுவதும் கண் விழித்து கலர் கலராக அழகழகான கோலங்களை போட்ட மக்கள், அதிகாலையில் குளித்து புத்தாடை அணிந்து வாசலில் பொங்கல் வைத்து வழிப்பட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் உங்கள் பொங்கல் எந்த திசையில் வழிந்திருக்கிறது என்பதை கவனித்து அதன் நன்மை தீமைகளை தெரிந்து கொள்வது அவசியம். பொதுவாக, கிழக்கு, வடக்கு நோக்கி பால் பொங்கி வழிந்தால், நம் வீட்டில் நல்லது நடைபெறும் என்பது நம்பிக்கை. குறிப்பாக, பால் கிழக்கு திசையில் பொங்கி வழிந்தால், நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும் என்பதை உறுதியாக உணர்த்தும் அறிகுறி. வீடு, வண்டி, வாகனம் வீட்டிற்குத் தேவையான ஏதேனும் பொருட்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதனை தாராளமாக வாங்கும் யோகம் உங்களை வந்து சேரும்.



அன்றாட வாழ்க்கையில் இருந்த பணப்பிரச்சனைகள் நீங்கி செல்வங்கள் சேரும் என்பது நம்பிக்கை. பொங்கல் பானையில் இருந்து பொங்கும் பால் மேற்கு திசையில் பொங்கி வழிந்தால், சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணமாகாதவர்கள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கு வரன் நிச்சயம் அமையும். வருமானத்திற்கேற்ப சுப செலவுகள் இருக்கும் என எண்ணிக் கொள்ளுங்கள். வடக்கு திசையில் பொங்கல் வழிந்தோடினால் பணம் வரவு அதிகரிக்கும். பதவி உயர்வு தேடி வரும். படித்து முடித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். பூர்வீக சொத்து பிரச்சனைகளை சுமூகமான முடிவை எட்டும். தெற்கு திசையில் பால் பொங்கி வழிந்தோடினால் எதிர்மறை விஷயங்களுக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. அதாவது சுப காரியங்கள் சற்று தாமதமாகும் என்பதோடு மருத்துவ செலவுகள் இருக்கும். உடல் நிலையை கவனித்துக் கொள்வது அவசியம்.


மேலும் படிக்க | தை பொறந்தாச்சு...களைகட்டியது பொங்கல் கொண்டாட்டம்..! பொங்கல் வைக்கும் முறை இதுதான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ