Pongal Kolam Desgin 2023 தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் வருகிற ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படும். இதற்காக மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர், அந்த வகையில் மக்கள் தங்களின் வீட்டை சுத்தம் செய்வதில் தொடங்கி அன்றைக்கு என்ன கோலம் போட வேண்டும் என்பது வரை ஒரு வாரத்திற்கு முன்னரே தயாராகி வருகின்றனர். அதன்படி பொங்கலுக்கு என்ன கோலம் போட என்பது தான் பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாகும். எனவே இந்த பொங்கல் இங்கு கொடுக்கப்பட்டுள்ள கோலங்களில் உங்களுக்கு எது பிடிச்சுருக்கோ அதை தேர்வு செஞ்சு உங்கள் வீட்டு வாசலில் கோலம் போடுங்க.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொங்கல் அன்று பொங்கல் கோலங்கள் மட்டுமே போடவேண்டும் என்பதில்லை. மாறாக மயில் கோலமும், அழகான ரங்கோலிகளும் போட்டு வாசலை அழகுப்படுத்தலாம். வாசலின் நடுவில் மட்டும் போடப்படும் கோலங்கள் ஒரு அழகு என்றால், திண்ணைகளில் போடப்படும் கோலங்களும் தனி அழகு தான். 


மேலும் படிக்க | பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை உற்பத்தி செய்வதில் தீவிரம்


கோலம் என்பது மாவுக்கோலமாகவும், பொடிக் கோலமாகவும் தமிழ் கலாசாராத்தின் சாரமாய் தொடரும் கோலக் கலை தற்போது நவீன வடிவங்களையும் எடுத்துவிட்டது. மாக்கோலம், வண்ணக்கோலம், பூக்கோலம், 3-டி கோலம், அச்சுக்கோலம், பிளாஸ்டிக்கில் அச்சிடப்பட்ட கோலம், கம்ப்யூட்டர் கோலம், மணிக் கோலம் ரங்கோலி என கோலாகலமாய் கொடிக்கட்டிப் பறக்கும் கோலம் பழங்காலத்தில் இருந்து இக்காலம் வரை மாண்பு மங்காமல் நாள்தோறும் மலர்ந்துக் கொண்டே இருக்கிறது.



கோலங்களில் புள்ளிக் கோலம், ரங்கோலி போன்ற வகைகள் உள்ளன. கிராமங்களில் பெரியவர்கள் கோலமிட சிறியவர்கள் வண்ணமிட பொங்கல் பண்டிகை களைகட்டும். மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சில அமைப்புகள் கோலங்களுக்கு போட்டி நடத்தி பரிசுகளும் வழங்கி வருகின்றன. எனவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள மலர் கோலம், ரங்கோலி கோலங்களை வீட்டின் முன்பு போட்டு பொங்கல் அன்று அசத்துங்கள்.





 



மேலும் படிக்க | மண்பானையில் பொங்கல் வைத்திட வலியுறுத்தும் கல்லூரி மாணவர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ