எச்சரிக்கை! உங்கள் வீடும் இப்படி இருந்தால், கொரோனா தொற்றின் அபாயம் ஏற்படும்!!
நீங்கள் குடியிருக்கும் வீடுகளிலும் , பணிபுறியும் அலுவலகங்களிலும் போதுமான காற்றோட்டம் இல்லையென்றால், கொரோனா தொற்று பரவுவதற்கான அபாயம் உள்ளது....
நீங்கள் குடியிருக்கும் வீடுகளிலும் , பணிபுறியும் அலுவலகங்களிலும் போதுமான காற்றோட்டம் இல்லையென்றால், கொரோனா தொற்று பரவுவதற்கான அபாயம் உள்ளது....
புதுதில்லி: உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றை தவிற்க வீட்டிலேயே இருக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. ஆனால் உங்கள் வீட்டில் சரியான காற்றோட்டம் இல்லையென்றால், அதுவே மிக ஆபத்தானதாகி விடும் என்று உங்களுக்குத் தெரியுமா?
ஒரு ஆய்வின்படி, நீங்கள் தங்கியிருக்கும் வீடுகளிலும், பணியாற்றும் அலுவலகங்களிலும் போதுமான காற்றோட்டம் இல்லையென்றால், கொரோனா பெருந்தொற்று பரவும் அபாயம் உள்ளது என கூறப்பட்டுள்ளது. COVID-19 தொற்றுநோய்க்கு எதிரான இந்த போராட்டத்தில் இத்தகைய நிலமையை தடுத்து நிறுத்துவது மிக முக்கியமாகும்.
நகர மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பு இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, கொரோனா வைரஸ், SARS-CoV-2 போன்ற பல வைரசுகளின் உருவ அளவு 100 மைக்ரானை விடக் குறைவாகும்.
ஒரு நபர் இரும்பும் போதோ அல்லது தும்பும் போது வெளிப்படும் நீர்த்துளிகளில் வைரஸுடன், நீர், உப்பு மற்றும் சில கரிம பொருட்கள் இருக்கும் என இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் சர்ரே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இடம்பெற்றுள்ள ஒரு குழு, நீர்த்துளிகளிலிருந்து நீர் ஆவியாகும்போது, நுண்ணிய பொருள் சிறியதாகவும், இலகுவாகவும் மாறி காற்றில் மிதக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர். காற்றில் மிதக்கும் இந்த வைரஸ் தொற்றுநோய்க்கான அபாயத்தை அதிகரிக்கும். குறிப்பாக உட்புற சூழலில் காற்று நிலையானதாக இருந்தால் தொற்றின் அபாயம் அதிகரிக்கும்.
'பல வணிக மற்றும் பொது கட்டிடங்களில் இயந்திர காற்றோட்டம் பொதுவானது, ஆனால் அது மிகவும் ஆபத்தானது. அத்தகைய இடத்திற்குள் அசுத்தமான காற்று நீண்ட நேரம் ஒரே இடத்தை சூழ்ந்திருக்கும். இதனால் தொற்றின் அபாயம் மேலும் அதிகரிக்கும்.
உட்புற பகுதிகளிள் COVID-19 இன் பெருந்தொற்றை பரவாமல் தடுக்க ,கட்டிடத்தில் காற்றோட்டம் வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை அடையாளம் காண்பது, நோயாளிகள் இருந்த இடம் மற்றும் அங்கு நடக்கும் நடவடிக்கைகள் குறித்து தகுந்த நடவடிக்கைகள் உடனடியாக எடுப்பது ஆகியவை மிகவும் அவசியம். முகக்கவசங்கள் குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் தேவை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக ஆய்வின் முன்னணி எழுத்தாளர் பிரசாந்த் குமார் - "சிறந்த உட்புற காற்றோட்டம் என்பது தொற்றுநோயைக் குறைக்கும் மிக முக்கியமான படியாகும்." என்றுகூறியுள்ளார். எவ்வாறாயினும், கோவிட் -19 மற்றும் அது போன்ற வைரஸ்களின் வான்வழி பரவலைக் கண்டறிந்து புரிந்து கொள்ள அதிக முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இதனால் அதிக நபர்கள் கூடும் இடங்களில் காற்றில் கலந்துள்ள வைரஸ் மற்றவர்களை தாக்காமல் பாதுகாப்பதற்கான அனைத்து முன்முயற்சிகளையும் எடுக்க வேண்டியது மிக அவசியமாகும்.
- மொழியாக்கம்: எஸ்.ஹேமலதா