தேனீக்களை அழிவிலிருந்து காக்க புது முயற்சியில் இறங்கிய பிரபல ஆபாச வலைத்தளம்!!
தேனீகளை பாதுகாக்க தற்போது பிரபல ஆபாச இளையதளம் தேனீக்களை பாதுகாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது!!
தேனீகளை பாதுகாக்க தற்போது பிரபல ஆபாச இளையதளம் தேனீக்களை பாதுகாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது!!
தேனீக்கள் ஆறுகால்கள்(orthropods) கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன. இவை ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20,000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன.
இந்நிலையில், உலகத்தில் தேனீக்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. விரைவில் இருந்த உலகை விட்டே தேனீ இனம் அழிந்து விடும் அபாயம் கூட உள்ளது. அப்படி நடந்தால் இயற்கை சுழற்சியில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். இன்று விவசாயத்தில் பூச்சு மருந்து அதிகம் பயன்படுத்த துவங்கியதால் தேனீக்கள் உயிரிழப்பு அதிகமாகி வருகிறது. இந்த உலகில் ஆண்டிற்கு 235 பில்லியன் டாலர் மதிப்பிலான உணவு உற்பத்தி தேனீக்களை நம்பி உள்ளது. தேனீக்கள் அழிந்துவிட்டால் அந்த உற்பத்தியை இழக்கும் அபாயத்தில் இருக்கிறோம்.
இந்நிலையில் தேனீகளை பாதுகாக்க தற்போது பிரபல ஆபாச இளையதளம் தேனீக்களை பாதுகாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த தளத்தில் வாடிக்கையாளர்கள் வீடியோக்களை பார்ப்பது மூலம் அதில் விளம்பரம் செய்து அந்நிறுவனம் பணம் சம்பாதிக்கிறது. அதில் குறிப்பிட்ட ஒரு பகுதியை தேனீ வளர்ப்பிற்காக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அதற்காக ஆபாச நடிகைகளை கொண்டு ஒரு வீடியோ எடுத்து அதை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளது. மேலும் அந்த தளத்திற்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தேனீ வளர்ப்பிற்காக நன்கொடை வழங்கும்படியும் கேட்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்த தளத்தை ஒரு நாளுக்கு 11 கோடி பேர் பார்வையிடுகின்றனர். இது குறித்த பதிவை அந்த இணையதளம் தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் அறிவித்தனர். அதற்கு பலர் கருத்துக்களும் தெரிவித்துள்ளனர். அதில், சில பதிவுகளை உங்களின் பார்களிக்கு கீழே இணைத்துளோம்.