பிபிஎஃப் வரி சேமிப்பு: பொது வருங்கால வைப்பு நிதி அதாவது பிபிஎஃப் ஒரு மிகப்பெரிய முதலீட்டு வழிமுறையாகும். இது நல்ல வருமானத்தை அளிக்கிறது. இது E-E-E பிரிவில் வரும் முதலீடு, அதாவது இதில், முதலீடு, வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கு வரி கிடையாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை பிபிஎஃப்-ல் முதலீடு செய்தால் வரி விலக்கு கிடைக்கும். மக்கள் பிபிஎஃப்-இல் நம்பிக்கையுடன் முதலீடு செய்வதற்கு இதுவே காரணம். ஆனால் பிபிஎஃப்-ல் முதலீடு செய்வதற்கு முன் சில முக்கியமான விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டால், உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.


பிபிஎஃப் முதலீட்டு வரம்பு இரட்டிப்பாக்கப்படும்
பிபிஎஃப்-இல் முதலீடு செய்பவர்கள் உறுதியான வருமானத்தைப் பெறுவது மட்டுமின்றி, 1.5 லட்சம் ரூபாய் வரையிலான முதலீடுகளுக்கு வருமான வரியின் 80C பிரிவின் கீழ் வருமான வரி விலக்கும் கிடைக்கும். பிபிஎஃப் முதலீட்டின் வரம்பு முடிந்த பிறகும், முதலீட்டாளரிடம் முதலீடு செய்ய கூடுதல் பணம் இருந்தால், அவர், முதலீட்டிற்கான பிற திட்டங்களை பற்றி யோசிக்கத் தொடங்குவது பொதுவாக நடப்பதுண்டு. 


வரி நிபுணர்களின் கூற்றுப்படி, முதலீட்டாளர் திருமணமானவராக இருந்தால், அவர் தனது மனைவி அல்லது கணவரின் பெயரில் பிபிஎஃப் கணக்கைத் தொடங்கி அதில் தனித்தனியாக ரூ.1.5 லட்சத்தை முதலீடு செய்யலாம்.


மேலும் படிக்க | 7th Pay Commission:அகவிலைப்படி அரியர் தொகை பற்றிய பெரிய அப்டேட்


பிபிஎஃப்-ல் முதலீடு செய்தால் இந்த பலன்கள் கிடைக்கும்
நிபுணர்களின் கூற்றுப்படி, ஒருவரது வாழ்க்கைத் துணையின் பெயரில் ஒரு பிபிஎஃப் கணக்கைத் திறப்பது முதலீட்டாளரின் பிபிஎஃப் முதலீட்டின் வரம்பை இரட்டிப்பாக்கும். இருப்பினும் வருமான வரி விலக்கு வரம்பு அப்போதும் 1.5 லட்சமாகவே இருக்கும். உங்களுக்கு 1.5 லட்சம் வருமான வரி விலக்கு கிடைத்தாலும், இதில் வேறு பல நன்மைகள் உள்ளன. 


பிபிஎஃப் முதலீட்டு வரம்பு இரட்டிப்பாகி ரூ.3 லட்சமாகி விடுகிறது. E-E-E பிரிவில் இருப்பதால், முதலீட்டாளர் பிபிஎஃப்-இன் வட்டி மற்றும் முதிர்வுத் தொகையில் வரி விலக்கு பெறுகிறார்.


கிளப்பிங் விதிகள் எந்த விளைவையும் ஏற்படுத்தாது
வருமான வரியின் 64வது பிரிவின் கீழ் உங்கள் மனைவிக்கு நீங்கள் வழங்கும் தொகை அல்லது பரிசுகள் மூலம் கிடைக்கும் வருமானம் உங்கள் வருமானத்தில் சேர்க்கப்படும். எனினும், EEE காரணமாக முற்றிலும் வரி விலக்கு பெற்ற பிபிஎஃப் விஷயத்தில், கிளப்பிங் விதிகள் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.


திருமணமானவர்களுக்கான முதலீட்டு டிப்
எதிர்காலத்தில் உங்கள் வாழ்க்கைத்துணையின் பிபிஎஃப் கணக்கு முதிர்ச்சியடையும் போது, ​​உங்கள் வாழ்க்கைத்துணையின் பிபிஎஃப் கணக்கில் உங்கள் ஆரம்ப முதலீட்டின் வருமானம் உங்கள் வருமானத்தில் வருடா வருடம் சேர்க்கப்படும். எனவே, இந்த வசதி திருமணமானவர்களுக்கு பிபிஎஃப் கணக்கில் தங்கள் பங்களிப்பை இரட்டிப்பாக்க வாய்ப்பளிக்கிறது.


குறைந்த ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் மற்றும் என்பிஎஸ், மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீடுகளைச் செய்ய விரும்பாதவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகக் கூறப்படுகிறது. ஜூலை-செப்டம்பர் காலாண்டில் பிபிஎஃப்-இன் வட்டி விகிதம் 7.1% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | FD-களில் அதிக வட்டி விகிதங்களை வழங்கும் டாப் 20 வங்கிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR