FD-களில் அதிக வட்டி விகிதங்களை வழங்கும் டாப் 20 வங்கிகள்!

எந்த வங்கியில் சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதங்கள் அதிகமாக இருப்பதாக நீங்கள் எண்ணுகிறீர்களா அந்த வங்கியில் எஃப்டி கணக்கை ஓபன் செய்து கொள்ளலாம்.  

Written by - RK Spark | Last Updated : May 20, 2022, 10:06 PM IST
  • சமீபத்தில் பல வங்கிகள் தங்கள் எஃப்டிகளின் வட்டி விகிதத்தை உயர்த்தின.
  • எஃப்டி ஒரு நிலையான தொகை மற்றும் வழக்கமான வருமானத்தின் பாதுகாப்பை உறுதியளிக்கிறது.
  • மூத்த குடிமக்களுக்கு எஃப்டிகளில் கூடுதலாக 50 bps வட்டி வழங்கப்படுகிறது.
FD-களில் அதிக வட்டி விகிதங்களை வழங்கும் டாப் 20 வங்கிகள்!  title=

வங்கியில் பிக்ஸட் டெபாசிட் மூலம் தொகையை சேமித்து வைப்பவர்களுக்கு தற்போது இனிமையான செய்தி வெளியாகியுள்ளது.  சமீபத்தில் பல வங்கிகள் தங்கள் எஃப்டிகளின் வட்டி விகிதத்தை உயர்த்தி இருப்பதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளன.  தாங்கள் சேமிக்கும் பணத்திற்கு எவ்வித ஆபத்துகளும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பிக்ஸட் டெபாசிட் ஒரு சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது.  இது உங்கள் கணக்கில் எவ்வளவு காலம் பணம் இருக்கிறதோ அந்த காலம் முழுவதும் அசல் தொகைக்கு உத்தரவாதமான வட்டியை வழங்குகிறது.  வெவ்வேறு காலகட்டங்களில் பல எஃப்டிகளை நிர்வகிக்க இது உதவுகிறது.

மேலும் படிக்க | Post Office சேமிப்பு கணக்கு உள்ளவர்களுக்கு சூப்பர் செய்தி: அட்டகாசமான வசதி துவங்கியது

எந்த வங்கியில் சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதங்கள் அதிகமாக இருப்பதாக நீங்கள் எண்ணுகிறீர்களா அந்த நினைக்கும் வங்கியில் எஃப்டி கணக்கை ஓபன் செய்து கொள்ளலாம்.  இது முற்றிலும் உங்கள் விருப்பம், ஆனால் சேமிப்பு கணக்கு வைத்திருக்காத ஏதேனும் வங்கி ஒன்றிற்கு நீங்கள் சென்றால் உங்கள் KYC மற்றும் பிற ஆவணப்படுத்தல் செயல்முறைகள் இருக்கும் என்பதால் இதில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருக்கிறது.  எஃப்டி ஒரு நிலையான தொகை மற்றும் வழக்கமான வருமானத்தின் பாதுகாப்பை உறுதியளிக்கிறது. நீங்கள் சில காலத்திற்குப் பயன்படுத்த விரும்பாத மொத்தத் தொகை உங்களிடம் இருந்தால், அந்தப் பணத்தை நீங்கள் எஃப்டி கணக்கில் வைக்கலாம்.  எவ்வளவு காலத்திற்கு பணத்தை வைத்து இருக்கிறீர்களோ அந்த காலம் முழுவதும் எஃப்டிகள் உங்களுக்கு நிலையான வட்டி விகிதத்தை வழங்குகின்றன.

தற்போதுள்ள காலகட்டத்தில் எஃப்டி கணக்கைத் திறப்பது எளிது, ஆன்லைன் பேங்கிங் மூலம் அதைச் செய்யலாம் அல்லது அருகிலுள்ள வங்கிக்கோ அல்லது நீங்கள் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் அதே வங்கியிலோ எஃப்டி கணக்கைத் திறந்தால், உங்களுக்கு KYC செயல்முறை தேவையில்லை மற்றும் உங்கள் கணக்கு மூலம் பணத்தை எஃப்டிக்கு மாற்ற முடியும்.  மூத்த குடிமக்களுக்கு எஃப்டிகளில் கூடுதலாக 50 bps வட்டி வழங்கப்படுகிறது.  அதனால் வீட்டில் உள்ள வயதானவர்கள் பெயரில் எஃப்டி கணக்கை திறப்பதன் மூலம் உங்களுக்கு அதிக வட்டி கிடைக்கும்.  உங்களின் எஃப்டியில் நீங்கள் கடன் வாங்கலாம், அதற்கு சில விதிமுறைகள் உள்ளது.  தற்போது எஃப்டிகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்கும் முதல் 20 வங்கிகள் கீழே உள்ளன. 1 மற்றும் 5 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட வட்டி விகிதங்கள் மற்றும் காலங்களை ஒப்பிட்டு வசதிக்கேற்ப நீங்கள் தேர்வு செய்யலாம்.

fd

மேலும் படிக்க | இந்த ஆண்டு முதலீடு செய்ய சிறந்த டாப் 10 கிரிப்டோகரன்சிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News