ரயில்களில், ரயில்வே நிலையங்களில் விற்பனை செய்யப்படும் டீ, காபி ஆகியவற்றின் விலையை உயர்த்த ரயில்வே துறை வாரியம் முடிவு செய்துள்ளது...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி, 150 மில்லி அளவு கொண்ட டீ பேக் கொண்ட தேநீரும், 170 மில்லி அளவு கொண்ட காபியும் 7 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளது. அதேசமயம், ரெடிமேட் ஸ்டான்டர்ட் தேநீர் வழக்கம் போல் ரூ.5 விலையில் தொடர்ந்து விற்பனையாகும் எனக் கடந்த 18-ம் தேதி ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும், தற்போது 350-க்கும் மேற்பட்ட ரயில்களில் சமையற்கூடம் வசதி இருக்கிறது. அந்த ரயில்கள் அனைத்திலும் உணவுப் பொருட்களின் விலை மாற்றப்பட உள்ளது. அதேசமயம், ராஜ்தானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் எந்த மாற்றமும் இருக்காது.


இது தொடர்பாக ஐஆர்சிடிசி மாற்றியமைத்த விலைப்பட்டியலுக்கு ரயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது. ஒரு முறை உயயோகிக்கும் குவளைகளை பயன்படுத்தி தேநீர் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றத்திற்கு ஏற்ப உரிமத் தொகையை உயர்த்துமாறு அனைத்து மண்டலங்களையும் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


இது குறித்து ரயில்வே வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது, "லைசென்ஸ் கட்டணத்தை மாற்றியமைக்க ஐஆர்சிடிசி நிறுவனத்துக்கு ரயில்வே வாரியம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. அதற்கு ஏற்றார்போல், ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் விற்பனையாகும் டீ, காபி, குளிர்பானங்கள், தண்ணீர் ஆகியவற்றின் விலையையும் உயர்த்திக்கொள்ளும்படி கேட்டிருந்தது என தெரிவித்துள்ளார்..!