மதுரை: கொரோனாவால் உலகமே அதிர்ந்துபோய், வாழ்வின் இயல்புத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பெரியவர்கள் முதல் குழந்தைகள், மாணவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோய் உடல்ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தினால், அதன் பக்கவிளைவாக உலக இயல்பே தலைகீழாக மாறிவருகிறது என்பத நிருபீக்கிறது ஒரு வேலை வாய்ப்பு விளம்பரம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா தொற்றுநோய் பல விஷயங்களையும், வாழ்க்கைமுறையையும், வேலையையும், படிப்பையும் பெருமளவு பாதித்து அவற்றை ஆன்லைனில் மாற்றிவிட்டது. மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பெரும்பாலான வகுப்புகள் ஆன்லைனிலேயே நடைபெறுகிறது.


இந்த நிலையில், தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கி வெளியிட்ட வேலை வாய்ப்பு விளம்பரத்தில் "2021ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருப்பதோடு, மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றிய கேள்விக்குறியையும் எழுப்பியிருக்கிறது.



2021 இல் பட்டம் பெற்றவர்கள் (தொற்றுநோயின் போது ஒரு வருட ஆன்லைன் வகுப்புகளுக்குப் பிறகு) தங்கள் தொழில் வாய்ப்புகளைப் பற்றி கவலைப்படும் நிலையில், தனியார் வங்கி வெளியிட்டுள்ள செய்தித்தாள் விளம்பரம் கவலையடையச் செய்துள்ளதாக நெட்டிசன்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


மதுரையில் நேரடி நேர்காணலுக்கு பட்டதாரிகளை (28 வயதிற்குட்பட்டவர்கள்) அழைப்பு விடுத்துள்ள ஒரு விளம்பரத்தில் "2021ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்" என்று தெளிவாக குறிப்பிடப்படிருந்தது.


இது தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் பணியாற்றுவதற்கான வேலைவாய்ப்புக்கான விளம்பரம்.  இந்த விளம்பரம் பல்வேறு கண்டனங்களை எதிர்கொண்டது. பல்வேறு தரப்பினரும் இதை சுட்டிக்காட்ட, சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் வங்கியும் விளக்கம் அளித்து வருத்தம் தெரிவித்துள்ளது. 
சமூக ஊடகங்களில், சர்ச்சைய ஏற்படுத்திய அச்சு விளம்பரத்தை முன்னிலைப்படுத்தும் ட்வீட்கள் இவை:



"இது ஒரு பிழை. இந்த தவறுக்கு நாங்கள் வருந்துகிறோம். விளம்பரத்தில் குறிப்பிட்ட வயது வரம்பில் இருக்கும் மாணவர்கள், தேர்ச்சி பெற்ற ஆண்டைப் பொருட்படுத்தாமல் விண்ணப்பிக்கலாம் ”என்று எச்டிஎப்சி வங்கி செய்தித் தொடர்பாளர் ஜீ மீடியாவிடம் கூறினார். நேரடி நேர்காணல் தொடர்பான சரியான விளம்பரம் செய்தித்தாளிலும் வெளியிடப்பட்டது. விளம்பரத்தின் சமீபத்திய நகல், வங்கிக் கிளையில், விற்பனை அலுவலர் பதவிக்காக ஆட்சேர்ப்பு நடைபெறுவதை அறிவிக்கிறது. "2021 தேர்ச்சி பெற்ற வேட்பாளர்களும் தகுதியுடையவர்கள்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆரம்ப விளம்பரத்தை வெளியிடும் போது, ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு பொறுப்பான நிறுவனம் உரிய நடைமுறையைப் பின்பற்றவில்லை என்பது புரிந்தது. இந்த ஆட்சேர்ப்பு இயக்கம் செவ்வாய்க்கிழமை மதுரையில் நடந்ததாகக் கூறப்படுகிறது மற்றும் இந்த ஆண்டு பட்டம் பெற்ற பட்டதாரிகளும் நேர்காணலில் கலந்துக் கொண்டதாக கூறப்படுகிறது.


இந்த விளம்பரம் சமூக ஊடகங்கள் மற்றும் உடனடி செய்தியிடல் தளங்களில் வைரலாகி வருகிறது, இந்த நேரத்தில் "கொரோனா பேட்ச்" என்று குறிப்பிடப்படும் அல்லது 2021 இல் பட்டம் பெற்றவர்கள் பற்றி மீம்ஸ்கள் வைரலாகின்றன.


Also Read | நடுத்தர வயதினரிடையே அதிகரிக்கும் “Stress Fracture”; அதிக உடற்பயிற்சி காரணமா..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR