புதன் ராசி மாற்றம் 2022: ஜோதிடத்தில், புதன் கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படுகிறது. புதன் தற்போது ரிஷப ராசியில் சஞ்சரித்து வருகிறார். மே 10, 2022 அன்று புதன் இந்த ராசியில் தலைகீழ் இயகத்தில் சென்றார். இப்போது புதன் 03 ஜூன் 2022 அன்று ரிஷப ராசியில் மார்க்கியாக உள்ளார், அதாவது நேரான நகர்வில் நுழையவுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதன் கிரகம் பேச்சு, வணிகம் மற்றும் புத்திசாலித்தனம் போன்றவற்றுடன் தொடர்புடையது. புதனின் பெயர்ச்சி நிலை சில ராசிக்காரர்களுக்கு சிரமங்களைத் தரும். புதனின் நிலை மாற்றத்தால் பிரச்சனைகளை எதிர்கொள்ள உள்ள சில ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


மேஷம்:
புதனின் மாற்றம் மேஷ ராசியினருக்கு சில சவால்களையும் இன்னல்களையும் உருவாக்கலாம். இந்த காலகட்டத்தில் பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிறருக்கு கடன் கொடுப்பதை தவிர்க்கவும். இந்த காலத்தில், நீங்கள் பொய் சொன்னால், அதனால் பெரிய பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். 


ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கையும் மேஷ ராசியில் உள்ளது. ஆகையால், இந்த நேரத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பேச்சில் பொறுமையாக இருங்கள். நண்பர்களுடனும் குடும்ப உறுப்பினர்களுடனும் கவனமாக பேசுங்கள். 


மேலும் படிக்க | 141 நாட்கள் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசியினரை படாய் படுத்தி எடுக்கும் 


ரிஷபம்:


புதன் ரிஷப ராசியில் நுழையவுள்ளார். உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிரன். புதன் சுக்கிரனுடன் நட்பு உணர்வு கொண்டவர். இருப்பினும், புதனின் மாற்றம் உங்களுக்கு சில சிரமங்களைத் தரலாம். இந்த நேரத்தில் தேவையற்ற பணம் செலவழிக்க நேரிடும். 


இன்பங்கள் நிறைந்த வாழ்க்கை அமையும். எனினும், பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். தவறான நபர்களுடன் பழக வேண்டாம். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் பணிகளை அனைவரும் பாராட்டுவார்கள். 


விருச்சிகம்:


விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதன் புதிய சவால்களை கொண்டு வரக்கூடும். உங்கள் ராசியின் அதிபதி செவ்வாய். புதனுக்கும் செவ்வாய்க்கும் இடையே பகை உணர்வு உள்ளது. உடல்நலம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்வில் பிரச்சனைகள் வரலாம். குழந்தையைப் பற்றிய கவலை ஏற்படலாம். பண விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது.


பிரச்சனைகள் வந்தாலும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களால் அமைதி பெறுவீர்கள் இந்த காலத்தில் அதிகபட்ச ஜாக்கிரதை தேவை. ஒரு வேலையை செய்வதற்கு முன்னர் பலமுறை யோசித்து செய்யவும், அவசரப்பட்டு செய்ய வேண்டாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )


மேலும் படிக்க | Shani Jayanti 2022: 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசிக்கு பணக்கார யோகம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR