இந்தியாவில் PUBG Lite வெர்சஷன் வெளியாகவுள்ள நிலையில், அதற்கான முன்பதிவினை இந்தியாவில் துவங்கியுள்ளது Player Unknown’s Battlegrounds (PUBG)!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இளசுகள் துவங்கி பெரியவர்கள் வரை அனைவரையும் வசப்படுத்தி வைத்திருக்கும் PUBG விளையாட்டின் Lite வெர்ஷன் இந்தியாவில் இந்த மாத இறுதியில் அறிமுகமாக உள்ளது.


Player Unknown’s Battlegrounds (PUBG), இந்த விளையாட்டை குறித்து இந்தியாவில் அறிமுகம் செய்ய தேவையில்லை. அந்த அளவிற்கு எற்கனவே பிரபலமாகி விட்டது. நம்மை சுற்றியிருப்பவர்கள் பலரும் இந்த விளையாட்டின் மோகத்தில் தத்தளித்து வரும் நிலையில் இந்த விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என பல மாநிலங்களில் எதிர்ப்பு குரல்கள் எழுந்து அடங்கியாகிவிட்டது. 


இதற்கிடையில் தற்போது இந்த விளையாட்டின் லைட் வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என Player Unknown’s Battlegrounds (PUBG) தெரிவித்துள்ளது. ஹாங்காங், தைவான், பிரேசில், வங்காளதேசம் ஆகிய நாடுகளை தொடர்ந்து மிகப்பெரிய சந்தையாக விளங்கும் இந்தியாவில் PUBG லைட் வெர்ஷன் இந்த மாதம் 25-ஆம் தேதியன்று வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இதன்படி PUBG விளையாட்டின் Lite வெர்ஷனை பயன்படுத்த அதிக திறன் இல்லாத கணிப்பொறிகள், லேப்டாப்கள் இனி தேவைப்படாது, திறன் குறைந்த கணிப்பொறிகளே போதுமானது.


Minimum System Requirements


  • OS: Windows 7,8,10 64Bit

  • CPU: Core i3 @2.4Ghz

  • RAM: 4GB

  • GPU: Intel HD 4000

  • HDD: 4GB


Recommended System Requirements


  • OS: Windows 7,8,10 64Bit

  • CPU: Core i5 @2.8Ghz

  • RAM: 8GB

  • GPU: Nvidia GTX 660 or AMD Radeon HD 7870

  • HDD: 4GB


இந்நிலையில் தற்போது இந்த விளையாட்டிற்கான முன்பதிவினை (‘Participate Event’) பதிவு செய்யும் விதமாக ப்ரத்தியேக வலைதளம் ஒன்றினை PUBG வெளியிட்டுள்ளது. இதில் PUBG வாடிக்கையாளர்கள் தங்களது தகவல்களை உள்ளிட்டு பதிவு செய்துக்கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.