புத்தாண்டை முன்னிட்டு விவசாயிகளுக்கு ஒரு நல்ல செய்தி. விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க, விவசாயிகளுக்கு நேரடி பலன்களை அளிக்கும் வகையில், அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வங்கிகளும் குறைந்த வட்டியில் கடன் கொடுத்து உதவுகின்றன. அந்தவகையில் நீங்கள் ஒரு விவசாயி என்றால், விவசாயப் பணிகளுக்கு தேவைப்படும் பணத்தை குறைந்த வட்டியில் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கடனாக பெற்றுக் கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த அறிவிப்பை பஞ்சாப் நேஷ்னல் வங்கி இப்போது வெளியிட்டிருக்கிறது. இந்த லோன் மூலம் உரம், விதைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை மலிவு விலையில் வாங்கிக் கொள்ளலாம். நீங்கள் அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 


விவசாயிகளுக்கு மலிவான கடன் 


தற்போது வங்கிகளும் விவசாயிகளுக்கு பெரும் சலுகைகளை வழங்கத் தொடங்கியுள்ளன. விவசாயிகளுக்கு உரம், விதைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு மலிவு விலையில் வங்கி கடன் வழங்குகிறது. இந்த வரிசையில், விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் விவசாயக் கடனை பிஎன்பி வங்கி வழங்கி வருகிறது. இதுமட்டுமின்றி, கிசான் கிரெடிட் கார்டுகளையும் கொடுத்து, அதன் மூலம் கடன் கிடைக்கும். இப்போது மிகவும் பெயரளவிலான விதிமுறைகளுடன் எளிதாகக் கடன்களை வழங்குகிறது.


மேலும் படிக்க | இனி இதற்கெல்லாம் பான் அட்டை தேவையில்லை... பட்ஜெட்டில் வருகிறது அப்டேட்!


வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு 


PNB தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் கடன் குறித்த முழு விவரங்களையும் அளித்துள்ளது. அந்த அறிவிப்பில், 'PNB விவசாய கடன் மூலம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். விவசாயக் கடனுக்கு எப்படி விண்ணப்பிப்பது? முழுமையான தகவல் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்’ என தெரிவித்துள்ளது.


இந்த கடன் யாருக்கு கிடைக்கும்?


PNB-ன் இந்த சிறப்பு சலுகையை நீங்களும் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், நீங்கள் எளிதாகப் பெறலாம். இதற்கு நீங்கள் PNB விவசாயக் கடனின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக, வங்கி பல்வேறு முறைகளை வழங்கியுள்ளது. உங்கள் வசதிக்கேற்ப இந்த வழிகளில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் கடன் பெறலாம்.



கடன் வாங்குவது எப்படி?


* நீங்கள் விரும்பினால், 56070 என்ற எண்ணுக்கு 'LOAN' என்று எஸ்எம்எஸ் செய்யவும்
* இது தவிர 18001805555 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்து கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
* நீங்கள் விரும்பினால், 18001802222 என்ற எண் மூலம் கால் சென்டரைத் தொடர்புகொண்டு கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
* இது தவிர, நெட் பேங்கிங் இணையதளமான netpnb.com என்ற விருப்பத்தையும் வங்கி வழங்கியுள்ளது.
* PNB One மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.


மேலும் படிக்க | இவர்கள் ஆதார் உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும்! ஆதார் ஆணையம் அறிவுறுத்தல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ