இந்த வங்கியின் FD-இல் முதலீடு செய்தால் அதிக லாபம்... வட்டி விகிதம் உயர்வு!
Axis Bank FD Interest Rate: ஆக்சிஸ் வங்கி, தங்களின் நிலையான வைப்புத்தொகைக்கான (Fixed Deposit) வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதால், குறைந்த காலக்கட்டத்திலேயே முதலீட்டிற்கான சிறந்த பலன்களை வாடிக்கையாளர்கள் பெறலாம் என கூறப்படுகிறது.
Axis Bank FD Interest Rate: தனியார் துறையின் ஆக்சிஸ் வங்கி, நிலையான வைப்புத்தொகைக்கான (Fixed Deposit) வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. வங்கி வெவ்வேறு காலகட்டங்களுக்கான நிலையான வைப்புத்தொகைக்கான விகிதங்களில், 5 அடிப்படை புள்ளிகள் (BPS) அதிகரித்துள்ளது.
வங்கியின் இணையதளத்தின்படி, இந்த புதிய விகிதங்கள் கடந்த ஏப். 21ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. ஆக்சிஸ் வங்கியின் ஆன்லைன் FD திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரம் டெபாசிட் செய்ய வேண்டும்.
ஆக்சிஸ் வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 3.50 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. 2 வருடங்கள் முதல் 30 மாதங்களில் முதிர்ச்சியடையும் FD-களுக்கு 7.20 சதவீத வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது, அதே நேரத்தில் மூத்த குடிமக்கள் இந்த காலகட்டத்தின் FD-களுக்கு 7.95 சதவீத வட்டியைப் பெறுவார்கள்.
மேலும் படிக்க | ரூ. 10 லட்சம் கட்டினால் ரூ.20 லட்சம் கிடைக்கும்... போஸ்ட் ஆபிஸின் சிறப்பு திட்டம்!
ஆக்சிஸ் வங்கியின் புதிய FD விகிதங்கள்
7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் FD-களுக்கு 3.50 சதவீத வட்டி விகிதத்தை தொடர்ந்து வழங்கும். 46 நாட்கள் முதல் 60 நாட்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு வங்கி 4 சதவீத வட்டியை செலுத்தும். 61 நாட்கள் முதல் 3 மாதங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 4.50 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படும்.
இப்போது 4.75 சதவீத வட்டி விகிதம் 3 மாதங்கள் முதல் 6 மாதங்களில் முதிர்ச்சியடையும், FD-களுக்கு வழங்கப்படும். ஆக்சிஸ் வங்கி 6 மாதங்கள் முதல் 9 மாதங்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 5.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்கும். 9 மாதங்கள் முதல் 1 வருடத்தில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 6% வட்டி விகிதம் வழங்கும்.
ரெப்போ வட்டியில் மாற்றமில்லை
சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சாமானியர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. அதாவது, புதிய நிதியாண்டின் முதல் பணக் கொள்கை குழு கூட்டத்தில், ரெப்போ விகிதத்தை நிலையானதாக வைத்திருக்கும் அறிவிப்பு வெளியானது. ரெப்போ விகிதம் 6.50 சதவீதமாகத் தக்கவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 2022ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 2.50 சதவீதம் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பெண்களுக்கு அதிக லாபத்தை தரும் முதலீடுகள்... இதோ தெரிந்துகொள்ளுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ