ராகு பெயர்ச்சி 2022: நாகநாத சுவாமி ஆலயத்தில் ராகு பெயர்ச்சி விழா
திடீர் அதிர்ஷ்டம், பணவரவு யோகங்கள் ஆகியவை ஏற்பட முக்கிய காரணம் ராகு தான் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
நவ கிரகங்களில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்றாலும் இந்த கிரகங்களின் பெயர்ச்சி வாழ்க்கையில் ஏற்படும் விஷயங்களில் முக்கிய பங்கு பகிக்கிறது. இந்த ஆண்டின் ராகு கேது பெயர்ச்சி இன்று நிகழ்கிறது. 18 மாதங்களுக்கு ஒரு முறை இடம் பெயரும் ராகு, இன்று மதியம் 3.13 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடம் பெயர்கிறார்.
ராகு கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது எனக் கூறுவதுண்டு. அந்த அளவிற்கு அவர் அள்ளிக்கொடுப்பார். திடீர் அதிர்ஷ்டம், பணவரவு யோகங்கள் ஆகியவை ஏற்பட முக்கிய காரணம் ராகு தான் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் ராகு பெயர்ச்சியை முன்னிட்டு, ராகு பரிகார தலமாக விளங்கும் கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் நாகநாத ஸ்வாமி ஆலயத்தில் இன்று யாகசாலையில் பூஜைகள் முடிந்து புனித நீரை கொண்டு வந்து மங்கள ராகு பகவானுக்கும் நாக கன்னி நாகவல்லிக்கும் பல மங்கலதிரவிய பொருட்களால் அபிஷேகம் செய்விக்கப்பட்டது.
மேலும் படிக்க | கும்ப ராசியில் பிரவேசிக்கும் சுக்கிரனால் ‘இந்த’ ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை தான்..!!
பிறகு, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது, பின்னர் தங்கக்கவசம் சாத்தப்பட்டு பஞ்ச தீபாராதனை காட்டப்பட்டது பொதுமக்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.
இந்த ராகு பெயர்ச்சியினால் மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம் ,துலாம், விருச்சிகம், தனுசு ,மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | 2022-ல் 2 முறை ராசி மாறுகிறார் சனிபகவான்: இவர்களுக்கு அடித்தது 2 மடங்கு அதிர்ஷ்டம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR