2022-ல் 2 முறை ராசி மாறுகிறார் சனிபகவான்: இவர்களுக்கு அடித்தது 2 மடங்கு அதிர்ஷ்டம்

Saturn Transit 2022: ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகமாகக் கருதப்படும் சனி தனது ராசியை இரண்டு முறை மாற்றுவது மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 18, 2022, 10:47 AM IST
  • கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும்.
  • மேலதிகாரியுடன் நல்லுறவு உருவாகும்.
  • நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வெளியூர் பயணம் நடக்கும்.
2022-ல் 2 முறை ராசி மாறுகிறார் சனிபகவான்: இவர்களுக்கு அடித்தது 2 மடங்கு அதிர்ஷ்டம் title=

ஜோதிட சாஸ்திரத்தின்படி மற்ற கிரகங்களை ஒப்பிடுகையில் மெதுவாக நகரும் கிரகம் சனி பகவான். அவர் இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுகிறார். 2021-ல் ஒருமுறை கூட ராசி மாறாத சனி இப்போது 2022-ல் இரண்டு முறை ராசியை மாற்றப்போகிறார். 

சனி ஒருமுறை வழக்கமான தன்மையில் பயணிப்பார். அதாவது ஏப்ரல் 29-ம் தேதி அவர் ராசி மாற்றம் செய்து மகர ராசியை விட்டு கும்ப ராசியில்  பிரவேசிப்பார். ஜூன் 5 முதல் பின்னோக்கி நகர்ந்து மீண்டும் மகர ராசியிலேயே இருப்பார். இதற்குப் பிறகு, அவர் ஜனவரி 17, 2023 வரை மகர ராசியில் இருப்பார். அதன் பிறகு மீண்டும் கும்ப ராசிக்கு வருவார். நீதியின் கடவுளாகக் கருதப்படும் மற்றும் ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகமாகக் கருதப்படும் சனி தனது ராசியை இரண்டு முறை மாற்றுவது மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.

இவர்கள் மீது சனியின் அருள் இருக்கும் 
2022 ஆம் ஆண்டில் இரண்டு முறை ஏற்படவுள்ள சனியின் ராசி மாற்றம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.

மேஷம்:
சனியின் ராசி மாற்றங்கள் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கும். அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மரியாதை கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். பணியிடத்தில் உறவுகள் சிறப்பாக இருக்கும்.

மேலும் படிக்க | உள்ளுணர்வு அதிகம் கொண்ட ராசிகள்! ஏமாறாத 4 ராசிகள் 

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 29க்குப் பிறகு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இந்த காலத்தில் உங்கள் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். நினைத்த வேலையை நீங்கள் பெறுவீர்கள். மேலதிகாரியுடன் நல்லுறவு உருவாகும். அதிக பாராட்டுகளும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். பண வரவு சாதகமாக இருக்கும்.

தனுசு: 
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் பண வரவுக்கு சாதகமான நேரமாகும். நிதி நிலை செழிப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்திருந்த வெளியூர் பயணம் நடக்கும். இந்த பயணத்தால் லாபம் காண்பீர்கள்.  தனுசு ராசிக்காரகளுக்கு, குறிப்பாக வணிகர்களுக்கு, இந்த நேரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மகரம்:
மகர ராசியினருக்கும் இந்த நேரம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். பண ஆதாயம் அதிகம் இருக்கும். தொழில்-வியாபாரத்திற்கு இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும். புதிய வேலை கிடைக்கலாம். பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவை வந்து சேரும். தொழிலதிபர்களுக்கு இந்த நேரம் அதிக லாபம் தரும். பெரிய ஒப்பந்தங்களை நீங்கள் எளிதாக பெற்று அதில் அதிக லாபம் காண்பீர்கள். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ராகு பெயர்ச்சி 2022: இவர்களின் தலைவிதி தலைகீழாக மாறும், நிம்மதியும் நிதியும் பெருகும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News