நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது ஏப்ரல் 12 ஆம் தேதி ராசியை மாற்றியுள்ளனர். இந்த ராகு-கேது பெயர்ச்சி 18 மாதங்களுக்கு பிறகு நடந்துள்ளது. ராகு மேஷத்தில் செவ்வாய் ராசியில் நுழைந்துள்ளார். இந்த நிலை சில ராசிக்காரர்களுக்கு சாதகமற்றதாக இருக்கும். ஜோதிட சாஸ்திரப்படி அடுத்த ஒன்றரை வருடம் மேஷம், மீனம், மகரம், தனுசு, துலாம் ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக நடக்க வேண்டிய காலம். மறுபுறம், தங்கள் ஜாதகத்தில் ராகுவின் நிலை நன்றாக  இல்லை என்ராலும் இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனைத்து 9 கிரகங்களும் வாழ்க்கையின் சில அம்சங்களுடன் தொடர்புடையவை. ராகுவைப் பற்றி பேசுகையில், இந்த கிரகம் கடுமையான பேச்சு, சூதாட்டம், பந்தயம், கெட்ட செயல்கள், தோல் நோய்கள், ஆன்மீக பயணங்கள் ஆகியவற்றிற்கு காரணமாகும். ராகு அசுபமாக இருப்பதை பல அறிகுறிகளால் கண்டறியலாம்.


ராகு மோசமாக இருந்தால், அந்த நபருக்கு கல்லீரல்-சிறுநீரக பிரச்சினைகள் இருக்கும். இது தவிர, அவர் ஒவ்வாமை, தொற்று, மூளை நோய், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, பெரியம்மை, தொழுநோய், புற்றுநோய், இதய நோய், தோல் நோய் போன்றவற்றால் பாதிக்கப்படலாம். எலும்புகள் பலவீனம், மூட்டுவலி, எலும்பு முறிவு போன்றவையும் ராகுவின் பாதிப்பிற்காக மோசமான அறிகுறிகளாகும்.


மேலும் படிக்க | கும்ப ராசியில் பிரவேசிக்கும் சனி பகவான்; நிம்மதி பெருமூச்சு விடும் இரு ராசிகள்


இது தவிர, ராகுவின் தாக்கம் நபரின் நடத்தையிலும் தெரியும். சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கோபப்படுவார், கசப்பாகப் பேசத் தொடங்குவார். மன அழுத்தம் தவறான புரிதல்களுக்கு பலியாகலாம்.


ராகு சாந்திக்கான  பரிகாரங்கள்


ராகு மோசமாக இருந்தால், சில பரிகார நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.  இதனால் நிம்மதியை கிடைக்கும். ராகு சாந்திக்காக ஒவ்வொரு அமாவாசை நாளிலும் 5  தேங்காய்களை நீர்நிலைகளில் விட வேண்டும். இது தவிர அன்னை பகவதி மற்றும் காலபைரவர் வழிபாடும் நிவாரணம் தரும். 'ஓம் பிரம் பிரிந் ப்ரோன் ச: ரஹ்வே நம' என்ற மந்திரத்தை உச்சரிக்கவும். ஒவ்வொரு சனிக்கிழமையும் கருப்பு ஆடைகளை அணியுங்கள்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | பண விஷயத்தில் அதிர்ஷ்டக்கார ராசிகள் இவர்கள்: சனி, செவ்வாயின் அருளால் செல்வம் கொழிக்கும் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR