இந்திய ரயில்வேயில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பப்படுகின்றன. இதற்கான அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, வடகிழக்கு ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை விளையாட்டு கோட்டாவில் நிரப்பப்பட உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணியின் விவரம்;


விளையாட்டு பிரிவில் தடகளம், வாலிபால், கூடைப்பந்து, ஹாக்கி, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் சிறந்த விளங்கும் விளையாட்டு வீரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


விளையாட்டு கோட்டா :


விளையாட்டு கோட்டாவில் நிலை 5,4,3 மற்றும் 2 பணியிடங்களுக்கு ரூ. 5,200-20,200 ஊதியம் கொடுக்கப்படும். கடந்த இரண்டு வருடங்கள் விளையாட்டுத் துறையில் படைத்த சாதனைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.


வயது வரம்பு:


இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 18 வயதில் இருந்து 25 வயது வரை இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி:


விண்ணப்பிக்கும் விளையாட்டு வீரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழில்நுட்ப பிரிவுக்கு 12 ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவு படித்திருக்க வேண்டும். கிராண்ட் பே ரூ.2,800 பிரிவு பணிகளுக்குப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை:


விளையாட்டுத் துறை கோட்டாவில் விண்ணப்பதார்களுக்குத் திறன் தேர்வு மற்றும் விளையாட்டுத் துறையில் படைத்த சாதனை அடிப்படையில் வேலைக்கான தேர்வு நடத்தப்படும். இதன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை:


இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர் https://ner.indianrailways.gov.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக்கட்டணமாக ரூ. 500/- செலுத்த வேண்டும். SC/ST/Ex-serviceman/PwBDs பிரிவினர் ரூ.250/- தேர்வு கட்டணமாகச் செலுத்த வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://ner.indianrailways.gov.in/


விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 25.12.2022 மாலை 5 மணி வரை.



 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ