நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். ரசிகர்களுடனான சந்திப்பின் கடைசி நாளான இன்று ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாக கூறியிருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி, நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். உள்ளாட்சி தேர்தலுக்கு கால அவகாசம் இல்லாதாததால் போட்டியிடவில்லை என்று கூறியிருந்தார்.


ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு பலரும் வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு மக்களின் நகைச்சுவை டிவிட்கள் தற்போது டிவிட்டரில் வெளியாகி பரவி வருகிறது. அதன் சில பதிவிகள் இதே:-