52 ஆண்டுகளுக்கு பின் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள அரிய யானை மூஞ்சுறு..!!!
யானை மூஞ்சுறு தோற்றத்தில் மூஞ்சுறு போல் இருந்தாலும் இதன் முகம் யானை போன்ற வடிவத்தில் இருக்கும்.
யானை மூஞ்சுறு என்பது ஒரு அரிய வகை மூஞ்சூறு ஆகும். இது ஆப்பிக்காவில் அழிந்து விட்டது என நம்பப்பட்டது. 52 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்பிரிக்காவில் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
இது தோற்றத்தில் மூஞ்சுறு போல் இருந்தாலும் இதன் முகம் யானை போன்ற வடிவத்தில் இருக்கும். அதாவது தோற்றத்தில் ஒரு குட்டி யானை போல் இருக்கும்.
பொதுவாக காணப்படும் அனைத்து மூஞ்சுறுகளின் தலையும், எலிகளில் தலையிலிருந்து வேறுபட்டு இருக்கும். மூஞ்சி நீண்ட சிறு உயிரினம் என்பதால் மூஞ்சுறு ஆனது. வாய்ப்புறம் கூம்பு வடிவத்தில் இருக்கும்.
ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு யானை மூஞ்சுறு தென்பட்டுள்ளது வன விலங்கு ஆர்வலர்களுக்கு பெறும் மகிழ்ச்சியை தந்துள்ளது.
யானை மூஞ்சுறுகள் ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அரிய வகை யானை மூஞ்சூறுகள் காணப்பட்டன. இந்த சிறிய உயிரினம் என்றாலும், யானை வகையை சேர்ந்ததாகும். அதனால் தான் யானை மூஞ்சூறு என அழைக்கப்படுகிறது.
இந்த யானை மூஞ்சூறு பூச்சிகளை சாப்பிட்டு உயிர் வாழ்கிறது.
விஞ்ஞானிகள் இப்போது இதனை வைத்து ஆய்வு நடத்த பெரிய அளவில் திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக இந்த உயிரினம் சோமாலியாவில் மட்டுமே காணப்பட்டது. இதை அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஸ்டீவன் ஹெரிடேஜ் அடையாளம் கண்டுள்ளார்.
இந்த உயிரினத்தை மீண்டும் பார்ப்பது, மிகவும் சிலிர்ப்பான தருணமாக இருந்தது என அவர் கூறுகிறார்.
மேலும் படிக்க | சாப்பிட வழியில்ல, செல்லப்பிராணிய தாங்க; குலை நடுங்க வைக்கும் கொரிய அதிபர் உத்தரவு