இந்திய போர் விமானத்தின் முதல் பெண் ஓட்டுநர் - அரிய தகவல்கள்!
![இந்திய போர் விமானத்தின் முதல் பெண் ஓட்டுநர் - அரிய தகவல்கள்! இந்திய போர் விமானத்தின் முதல் பெண் ஓட்டுநர் - அரிய தகவல்கள்!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2018/03/08/127147-avani.jpg?itok=2iTgS82K)
கடந்த மாதத்தில். கூகிளில் அதிகம் தேடப்படவர் பட்டியலில் இடம்பெற்றவர் அவனி சதுர்வேதி. இந்தியாவில் போர் விமானத்தை தனியாக ஓட்டி சாதனை படைத்த முதல் பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.
கடந்த மாதத்தில். கூகிளில் அதிகம் தேடப்படவர் பட்டியலில் இடம்பெற்றவர் அவனி சதுர்வேதி. இந்தியாவில் போர் விமானத்தை தனியாக ஓட்டி சாதனை படைத்த முதல் பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.
இந்திய விமானப்படையில் போர் விமானங்களை இயக்க பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பல கட்ட பயிற்சிக்கு பின் அவர்கள் குழுவாக தேர்வு செய்யப்பட்டு தனியாக விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது.
இதன்படி, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள விமானப்படைத் தளத்தில் அவனி சதுர்வேதி, பாவனா காந்த், மோகனா சிங் ஆகிய மூன்று பெண் விமானிகளுக்கு மிக் -21 பைசன் போர் விமானத்தை தனியாக ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இவர்களில் அவனி சதுரவேது கடந்த ப்பி., 21 அன்று மிக்-21 போர் விமானத்தினை தனியாக ஓட்டி சாதனைப்படைத்தார். இதனால் இந்தியாவில் போர் விமானத்தை தனியாக ஓட்டி சாதனை படைத்த முதல் பெண் என்ற பெருமை படைத்தார். இதனையடுத்து இவருக்கு நாடுமுழுவதும் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்விற்கு பிறகே இவரைப் பற்றி உலகம் அறிந்தாலும், அவரை பற்றி தெரியாத விஷயங்கள் இன்னும் பல இருக்கின்றது. அவற்றின் ஒரு சிறு தொகுப்பு...
மத்திய பிரதேசத்தில் ரேவா மாவட்டத்திலில் 1993-ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று அவனி பிறந்தார். இந்திய இராணுவத்தில் சேரவேண்டும் என்று சிறுவயது முதலே ஆர்வம் கொண்டவர். அதற்கு காரணம் அவருடைய சகோதரர் ஆக கூட இருக்கலாம். ஏனெனில் அவரது சகோதரர் விமானப் படையில் அதிகாரியாக இருந்தார்!
அவரது பள்ளி படிப்பினை டியோலேண்டில் முடித்தார். பின்னர் கல்லூரி படிப்பிற்காக அவர் பனஸ்தாலி பல்கலை-க்கு சென்றார். 2014 ஆம் ஆண்டில் தனது இளங்கலை படிப்பினை தொழில்நுட்ப பிரிவில் முடித்தார்.
அவருடைய தந்தை மத்திய பிரதேஷ அரசாங்கத்தில் நிர்வாக பொறியாளராக பணியாற்றினார்.
அவரது விமான துறை தேரவிற்கு பின்னர், ஐதராபாத்தி விமானப் படை அகடமியில் பயிற்சி பெற்றார்.
பின்னர், ஹிக்கிம்பேட்டிலுள்ள கிரான் பயிற்சிகூடத்தில் ஆறு மாத பயிற்சி பெற்றார், அதன்பின்னர் பிடார் ஏர் பேஸில் ஹாக் மேம்பட்ட பயிற்சிகூடத்தில் ஒரு வருடம் பயிற்சி பெற்றார்.
ஜூன் 18, 2016 இல், மோகனா சிங் மற்றும் பவானா காந்த் ஆகியோருடன், அவானி இந்திய விமானப்படைத் துருப்புக்களில் இணைந்தார்.
சுவாரஸ்யமாக, அவர் 43 ஆண் பயிற்சியாளர்களுடன் இவர் பயிற்சி பெற்றார். பயிற்சியில் இருந்த பெண்கள் தங்களது திருமணங்களையும் தாம்பத்தியங்களையும் தாமதப்படுத்திக் கொள்ளமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
தற்போது அவருடைய ஆரம்ப ஓட்டத்தினை சாதனை ஓட்டமாக மாற்றி இருந்தாலும், மேலும் அவர் 2 ஆண்டுகளுக்கு விமான ஓட்டலின் நுனுக்கங்கள் அறிந்துக்கொள்ளவும், தெரிந்துக்கொள்ளவும் பயிற்சியினை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்.
முன்னதாக பிரிட்டன், UK, இஸ்ரேல், பாக்கிஸ்த்தான் போர் விமானங்களில் பெண் ஓட்டுனர் கொண்ட இயக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பட்டியலில் அவனி சாதனையால் இந்தியாவும் இணைந்துள்ளது.
விமான துறையினை தவிர்த்து அவர் விளையாட்டிலும் ஆர்வம் மிக்கவர். குறிப்பாக டேபில் டென்னிஸ், செஸ் ஆகியவை மற்றும் ஓவியம் வரைவதிலும் ஆர்வம் மிக்கவர் என்பது குறிப்பிடத்தகது!