ரேஷன் கார்டு புதுப்பிப்பு: ரேஷன் கார்டு பயனாளிகளுக்கான புதிய புதுப்பிப்புகள் அவ்வப்போது வெளிவருகின்றன. ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு மற்றொரு சிறந்த வாய்ப்பை அரசு வழங்கியுள்ளது. ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்கும் கடைசி தேதியை அரசு நீட்டித்துள்ளது. பயனாளிகள் இப்போது ஜூன் 30, 2022 வரை தங்கள் ரேஷன் கார்டுகளை ஆதாருடன் இணைக்க முடியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரேஷன் அட்டையை ஆதாருடன் இணைப்பது போலவே, மொபைல் எண்ணை ஆதாருடன் இணைப்பதும் இன்றியமையாத ஒன்றாகும். உங்கள் மொபைல் எண் மாறியிருந்தால், உடனடியாக ரேஷன் கார்டில் அதை அப்டேட் செய்யவும். இதை செய்யவில்லை என்றால், ரேஷன் பொருட்கள் பெறுவதில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். 


ரேஷன் கார்டில் ஆதார் அட்டையை ஆன்லைனில் இப்படி இணைக்கவும்


1. இதற்கு முதலில் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
2. பின்னர் 'ஸ்டார்ட் நவ்' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். 
3. அதன் பிறகு உங்கள் முகவரி, மாவட்டம், மாநிலம் ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.
4. இதற்குப் பிறகு 'ரேஷன் கார்டு பெனிபிட்' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
5. இப்போது இங்கே உங்கள் ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்ப வேண்டும். 
6. இந்த தகவல்களை பூர்த்தி செய்த பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
7. இங்கே OTP ஐ நிரப்பிய பிறகு, உங்கள் திரையில் செயல்முறை முடிந்த செய்தியைப் பெறுவீர்கள்.
8. இந்த செயல்முறை அனைத்தும் முடிந்தவுடன், உங்கள் ஆதார் சரிபார்க்கப்பட்டு, உங்கள் ரேஷன் கார்டுடன் உங்கள் ஆதார் இணைக்கப்படும்.


ஆஃப்லைனிலும் இணைக்கலாம்


ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டை-யை இணைக்க, ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் ரேஷன் அட்டைதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களை ரேஷன் கார்டு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இது தவிர, உங்கள் ஆதார் அட்டையின் பயோமெட்ரிக் தரவு சரிபார்ப்பும் ரேஷன் கார்டு மையத்தில் செய்யப்படலாம்.


மேலும் படிக்க | உடனடியாக ரேஷன் கார்டில் இந்த அப்டேட் செய்யுங்கள், இல்லையெனில்


ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை புதுப்பிப்பது மிக எளிதாகும். இதை எப்படி செய்வது என இந்த பதிவில் காணலாம். 


வீட்டில் இருந்தபடியே ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை மிக விரைவாக புதுப்பிக்கலாம். புதிய எண்ணெய் புதுப்பிப்பதற்கான செயல்முறையும் மிக எளிதானதே. அதை பற்றி இங்கே காணலாம். 


ரேஷன் கார்டில் மொபைல் எண்ணைப் புதுப்பிப்பது எப்படி? 


- முதலில் ரேஷன் கார்ட் மாற்றுவதற்கான அரசாங்க இணையதளத்திற்கு செல்லவும்.


- இதில் மொபைல் எண்ணை மாற்றுவதற்கான பக்கத்தை திறக்கவும்.


- இதில் தகவல்களை உள்ளிடவும்.


- இதில் முதல் காலமில் குடும்பத் தலைவரின் ஆதார் எண் /  என்எஃப்எஸ் ஐடி-ஐ எழுதவும். 


- அடுத்த காலமில் ரேஷன் கார்ட் எண்ணை எழுதவும்.


- மூன்றாவது காலமில் குடும்பத் தலைவரின் பெயரை எழுதவும்.


- கடைசி காலமில் உங்கள் புதிய மொபைல் எண்ணை உள்ளிட்டு அதை சேவ் செய்யவும். 


- இப்போது உங்கள் மொபைல் எண் புதுப்பிக்கப்படும்.


'ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு' திட்டம்


ஜூன் 1, 2020 முதல் நாட்டின் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரேஷன் கார்டு பெயர்வுத்திறன் சேவையான 'ஒன் நேஷன்-ஒன் ரேஷன் கார்டு' சேவையை அரசாங்கம் தொடங்கியுள்ளது. அதாவது, ஒரு ரேஷன் கார்ட் கொண்டு பயனர்கள் நாட்டின் எந்த மாநிலத்திலும் ரேஷன் வாங்கலாம். 


இத்திட்டம் ஏற்கனவே ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், கோவா, ஜார்க்கண்ட், திரிபுரா, பீகார், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் டாமன்-டியூ ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Indian Railways: அடேங்கப்பா; இந்திய ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருவாய்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR