ரேஷன் கார்ட் பற்றிய முக்கிய அப்டேட்: கார்ட் தொலைந்தாலும் கவலை வேண்டாம்
Duplicate Ration Card: ரேஷன் கார்டு தொலைந்தால், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் நகல் ரேஷன் அட்டையை எளிதாக உருவாக்கலாம்.
டூப்ளிகேட் ரேஷன் கார்டு: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கியமான செய்தி. ரேஷன் கார்டு நமது நாட்டில் மிக முக்கியமான ஆவணமாகும். இதன் மூலம், பயனர்கள் அரசாங்கம் அளிக்கும் இலவச ரேஷனை பெறலாம். ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் பிற முக்கிய ஆவணங்களில் ரேஷன் கார்டும் ஒன்று. பல இடங்களில் இது அடையாளச் சான்றாகவும் பயன்படுத்தப்படுகிறது.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி
சில நேரங்களில் நாம் நமது ரேஷன் கார்டை தொலைத்து விடுகிறோம். சில சமயம் அது திருட்டுப்போய் விடுகிறது. அப்படிப்படட் சமயங்களில் பயனர்கள் அவதிப்பட வேண்டியதில்லை.
இந்த சந்தர்ப்பங்களில் எளிதாக ரேஷன் கார்டை மீண்டும் உருவாக்கிக்கொள்ளலாம். ரேஷன் கார்டு தொலைந்தால், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் நகல் ரேஷன் அட்டையை எளிதாக உருவாக்கலாம். ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் நகல் ரேஷன் கார்டை எப்படி எளிதாக உருவாக்குவது என்பதை இந்த பதிவில் காணலாம்.
நகல் ரேஷன் கார்டை ஆன்லைனில் உருவாக்கும் முறை:
- ஸ்டெப் 01: நகல் ரேஷன் அட்டையை உருவாக்க, முதலில் உங்கள் மாநிலத்தின் உணவுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- ஸ்டெப் 02: இப்போது முகப்புப் பக்கம் உங்கள் முன் திறக்கும்.
- ஸ்டெப் 03: அதன் பிறகு நகல் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் இணைப்பை கிளிக் செய்யவும்.
- ஸ்டெப் 04: இப்போது ஒரு ஆன்லைன் படிவம் உங்கள் முன் திறக்கும். படிவத்தில் கேட்கப்படும் அனைத்து முக்கியமான தகவல்களையும் நிரப்பவும்.
மேலும் படிக்க | ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு முக்கிய செய்தி: மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டது அரசு
- ஸ்டெப் 05: இப்போது கோரப்பட்ட ஆவணங்களைப் பதிவேற்றி அவற்றை சப்மிட் செய்யவும்.
- ஸ்டெப் 06: இந்தப் வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் நகல் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.
நகல் ரேஷன் கார்டை ஆஃப்லைனில் உருவாக்குவது எப்படி?
- ஸ்டெப் 01: ஆஃப்லைனில் நகல் ரேஷன் கார்டை உருவாக்க, நீங்கள் மாவட்ட உணவு மற்றும் விநியோகக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும்.
- ஸ்டெப் 02: குடும்ப உறுப்பினர்களின் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும் உடன் வைத்திருக்க வேண்டும்.
- ஸ்டெப் 03: பின்னர் மையத்தில் நகல் ரேஷன் கார்டுக்கான படிவத்தை பெறவும்.
- ஸ்டெப் 04: படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, உங்கள் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள், டிப்போ ஹோல்டர் அறிக்கை, அபராதக் கட்டணத்தின் இரண்டு ரசீதுகள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
- ஸ்டெப் 05: சரிபார்ப்புக்குப் பிறகு, அதைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கப்படும். அதன் பின்னர் நீங்கள் நகல் ரேஷன் கார்டைப் பெறுவீர்கள்.
இந்த ஆவணங்கள் தேவைப்படும்
நகல் ரேஷன் கார்டை உருவாக்க, ரேஷன் கார்டு எண், அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை , குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் அடையாளச் சான்று ஆகியவை தேவைப்படும்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR