ஆதார் - ரேஷன் இணைப்பு: ரேஷன் கார்டு பயனாளிகளுக்கான ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. பயனாளிகளுக்கு மற்றொரு சிறந்த வாய்ப்பை அரசு வழங்கியுள்ளது. ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்கும் கடைசி தேதியை அரசு நீட்டித்துள்ளது. பயனாளிகள் இப்போது ஜூன் 30, 2022 வரை தங்கள் ரேஷன் கார்டுகளை ஆதாருடன் இணைக்க முடியும்.
நீங்கள் இன்னும் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், உடனடியாக அதை செய்து முடிக்கவும். இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உணவு மற்றும் பொது விநியோகத் துறை இத்தகவலைத் தெரிவித்துள்ளது. முன்னதாக ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆக இருந்தது.
ரேஷன் கார்டு மூலம் பல நன்மைகள் கிடைக்கும்
ரேஷன் கார்டு மூலம் பயனாளிகளுக்கு குறைந்த விலையில் ரேஷன் மற்றும் இன்னும் பல சலுகைகளும் கிடைக்கும். ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன் கீழ், நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பயன் பெறுகின்றனர்.
ரேஷன் கார்டின் கீழ் உணவு தானியங்களைத் தவிர இன்னும் பல நன்மைகள் கிடைக்கின்றன. ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம், நாட்டின் எந்த மாநிலத்தின் ரேஷன் கார்டு கடையிலும் ரேஷன் பெற முடியும்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி
ரேஷன் கார்டில் ஆதார் அட்டையை ஆன்லைனில் இப்படி இணைக்கவும்
1. இதற்கு முதலில் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
2. பின்னர் 'ஸ்டார்ட் நவ்' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
3. அதன் பிறகு உங்கள் முகவரி, மாவட்டம், மாநிலம் ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.
4. இதற்குப் பிறகு 'ரேஷன் கார்டு பெனிபிட்' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
5. இப்போது இங்கே உங்கள் ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்ப வேண்டும்.
6. இந்த தகவல்களை பூர்த்தி செய்த பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
7. இங்கே OTP ஐ நிரப்பிய பிறகு, உங்கள் திரையில் செயல்முறை முடிந்த செய்தியைப் பெறுவீர்கள்.
8. இந்த செயல்முறை அனைத்தும் முடிந்தவுடன், உங்கள் ஆதார் சரிபார்க்கப்பட்டு, உங்கள் ரேஷன் கார்டுடன் உங்கள் ஆதார் இணைக்கப்படும்.
ஆஃப்லைனிலும் இணைக்கலாம்
ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டை-யை இணைக்க, ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் ரேஷன் அட்டைதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களை ரேஷன் கார்டு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இது தவிர, உங்கள் ஆதார் அட்டையின் பயோமெட்ரிக் தரவு சரிபார்ப்பும் ரேஷன் கார்டு மையத்தில் செய்யப்படலாம்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டில் இந்த தவறை செய்திருக்கிறீர்களா? ஒரு நொடியில் ரத்து
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR