ரேஷன் கார்டு அப்டேட்: நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவராகவும், திருமணமானவராகவும் இருந்தால், இந்தச் செய்தி உங்களுக்குப் பெரிதும் பயன்படும். ரேஷன் கார்டில் புதுப்பித்தல் பற்றிய முழுமையான தகவல்கள் உங்களிடம் இருக்க வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரேஷன் கார்டில் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீங்கள் திருமணம் செய்து கொண்டாலோ அல்லது உங்கள் குடும்பத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கப்பட்டாலோ, அந்த உறுப்பினரின் பெயரையும் ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும். இதைச் செய்யாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். 


ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரின் பெயரைச் சேர்ப்பதற்கான முழு செயல்முறையையும் இந்த பதிவில் காணலாம். 


ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி?


- நீங்கள் திருமணமானவராக இருந்தால் முதலில் ஆதார் அட்டையில் புதுப்பிக்கவும்.


- இதை செய்ய, பெண் உறுப்பினரின் ஆதார் அட்டையில் கணவர் பெயரை எழுத வேண்டும்.


- அதே நேரத்தில், உங்கள் குடும்பத்தில் குழந்தை பிறந்தால், அவரது பெயரை சேர்க்க தந்தையின் பெயர் அவசியமாகும்.


- இதனுடன், முகவரியையும் மாற்ற வேண்டும்.


- ஆதார் அட்டையை புதுப்பித்த பிறகு, திருத்தப்பட்ட ஆதார் அட்டையின் நகலுடன், உணவுத் துறை அலுவலரிடம் ரேஷன் அட்டையில் பெயர் சேர்க்க விண்ணப்பம் கொடுக்க வேண்டும். 


மேலும் படிக்க | பிரதமர் காப்பீட்டுத் திட்டம்; 7 ஆண்டுகளுக்கு பின் பிரீமியத்தில் மாற்றம்; ஜூன் 1 முதல் அமல் 


இதற்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்:


- மேலே குறிப்பிட்டுள்ள செயல்முறையை முடித்த பிறகு, அலுவலகத்திற்குச் சென்று உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.


- இது தவிர, வீட்டில் இருந்தபடியும் புதிய உறுப்பினர்களின் பெயர்களைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.


- இதற்கு, முதலில், உங்கள் மாநில உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.


- உங்கள் மாநிலத்தில் ஆன்லைனில் உறுப்பினர்களின் பெயர்களைச் சேர்க்கும் வசதி இருந்தால், வீட்டில் இருந்தபடியே இந்த வேலையைச் செய்யலாம்.


- பல மாநிலங்கள் இந்த வசதியை தங்கள் போர்ட்டலில் வழங்கியுள்ளன.


- பல மாநிலங்களில் இந்த வசதி இல்லை.


குழந்தைகளுக்கு தேவையான ஆவணங்கள்


- குழந்தையின் பெயரைச் சேர்க்க விரும்பினால், முதலில் குழந்தையின் ஆதார் அட்டையைப் பெற வேண்டும்.


- இதற்கு குழந்தையின் பிறப்புச் சான்றிதழும் தேவைப்படும்.


- இதன்பின், ஆதார் அட்டையுடன், ரேஷன் கார்டில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்.


மேலும் படிக்க | Ration Card: முக்கிய விதி மாற்றம், அடுத்த மாதம் முதல் புதிய ரூல் அமல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR