தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் மக்கள் புகார் அளிக்க ஏதுவாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையவழியில் புகாரளிப்பதில் சிரமம் உள்ளதாக மக்கள் புகார் அளித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் தரப்பிலிருந்து வந்த புகார்களை எம்.எல்.ஏ-க்கள் ஆய்வுக் கூட்டத்தில் விளக்கினர். இதைத்  தொடர்ந்து மக்களின் பிரச்சனைகளை புரிந்துகொண்ட அரசு, அனைத்து ரேஷன் கடைகளிலும் (Ration Shops) புகார் பதிவேடுகள் வைக்கப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.


இணையவழி புகார் பதிவில் சில நன்மைகள் இருந்தாலும், பதிவேடு முறையில் புகார்களை உடனடியாக தெரிவிக்கவும், அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் முடியும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.


எனினும், நடைமுறையில் இருக்கும் இணைய வழி புகார் நடைமுறையும் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப ரேஷன் கடைகள், பொருட்களின் விநியோகம், நியாயவிலைக் கடை அதிகாரிகள் (Ration Shop Officers) , முறைகேடுகள் ஆகியவை தொடர்பான புகார்களை புகார் பதிவேட்டிலோ, இணைய வழி மூலமாகவோ தெரிவிக்கலாம். 


ALSO READ: Ration Card அதிர்ச்சி செய்தி: இனி உங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் போகலாம்!!


உடனடியாக அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேடுகள் வைக்கப்பட்டு மக்கள் புகார் அளிக்க வசதிகள் செய்யப்பட வேண்டும் என்று அரசு (TN Government) சார்பில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், பொது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் ஒரு செய்தியும் வந்துள்ளது.  லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு ஒரு பின்னடைவாக, ரேஷன் கடைகளிலிருந்து பொது விநியோக முறைமையின் (PDS) கீழ் இலவச அல்லது மானிய விலையில் பொருட்களைப் பெறும் மக்களுக்கான தகுதிகளை புதுப்பிக்க உணவு மற்றும் பொது விநியோகத் துறை முடிவு செய்துள்ளது.


தகுதியை தீர்மானிக்கும் புதிய விதிகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும். பி.டி.எஸ் திட்டத்தின் பயனாளிகளுக்கான அளவுகோல்களை இறுதி செய்வதற்காக மாநில அரசுகளின் அதிகாரிகளுடன் இந்த துறை பல சுற்று சந்திப்புகளை நடத்தியுள்ளது.


உணவு மற்றும் பொது விநியோகத் துறை பகிர்ந்துள்ள தரவுகளின்படி. தற்போது, ​​80 கோடி இந்தியர்கள் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் பயனடைகின்றனர். 


ALSO READ: Ration Card: ரேஷன் அட்டையில் உள்ள குறியீடுகளுக்கு அர்த்தம் தெரியுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR