How to protect you banking transaction: ஆன்லைன் பரிவர்த்தனைகளில் நாடு முழுவதும் பல மோசடிகள் நடக்கின்றன. மோசடிக்காரர்கள் உங்கள் கணக்கை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். கொரோனா நேரத்தில், மக்கள் அதிக அளவில் ஆன்லைன் வங்கி செயல்முறையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், மோசடி செய்பவர்கள் மிகவும் தீவிரமாகிவிட்டனர். இதுபோன்ற மோசடிக்காரர்களிடமிருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க, ரிசர்வ் வங்கி அவ்வப்போது வாடிக்கையாளர்களை எச்சரித்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிசர்வ் வங்கி ட்வீட் மூலம் தகவல் தெரிவித்துள்ளது


சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வாடிக்கையாளர்களுக்கு மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம், டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நடக்கும் மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ரிசர்வ் வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் ட்வீட் செய்து, ' பாதுகாப்பான இணையதளங்கள் மற்றும் செயலிகளை வங்கி பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த வேண்டும். மேலும், பொது நெட்வொர்க்குகள் பாதுகாக்கப்பட வேண்டும். பாதுகாப்பான பரிவர்த்தனைகள் உங்களிடமிருந்துதான் தொடங்கும்.' என்று கூறியுள்ளது.



இப்படித்தான் மோசடி நடக்கிறது


மோசடி செய்பவர்கள் உங்கள் ரகசியத் தகவல்களைப் பெற, உங்கள் KYC விவரங்களைப் புதுப்பிப்பது போல் நடிக்கும் வழக்கம் உள்ளது. அதன் பிறகு KYC ஐப் பற்றி பேசி, உங்கள் கணக்கு முடக்கப்படும் என அச்சுறுத்தியோ அல்லது வேறு விதமாகவோ உங்களை நம்ப வைக்க முயற்சிப்பார்கள். 


மோசடி செய்வது யார்?
- மோசடி வங்கியாளர்கள்


- காப்பீட்டு முகவர்கள்


- சுகாதார அல்லது தொலைத்தொடர்பு ஊழியர்கள்


- போலி அதிகாரிகள்


ALSO READ | Bank Fraud: இவற்றில் கவனம் தேவை, இல்லையேல் உங்கள் பணம் ஒரு நொடியில் காலி!!


மோசடியைத் தவிர்க்க இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்
1. OTP மற்றும் PIN ஐ யாருடனும் பகிர வேண்டாம்
மிக முக்கியமான விஷயம்: வாடிக்கையாளர்கள் (Bank Customers) தங்கள் வங்கிக் கணக்கில் பணத்தைப் பெற PIN அல்லது OTP மூலம் அங்கீகரிக்கத் தேவையில்லை. யாராவது OTP/PIN ஐப் பகிர வேண்டும் என உங்களைக் கேட்டால், உடனடியாக எச்சரிக்கை உணர்வு வர வேண்டும். இது தவிர, சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். எந்த ஒரு வங்கியும், எந்த ஒரு நிறுவனமும் எந்த ரகசிய தகவலையும் கேட்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


2. தெரியாத எந்த இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம்
'இதுவரை காணாத சலுகைகள்' என நம்மை ஈர்க்க வைக்கும் பல அறிவிப்புகள் வரக்கூடும். அத்தகைய சலுகைகளை வழங்கும் இணைப்புகளை நீங்கள் கண்டால், இந்த இணைப்புகளை கண்டிப்பாக கிளிக் செய்ய வேண்டாம். ஏனெனில் இதற்குப் பிறகு உங்கள் தகவல்கள் ஃபிஷிங் இணையதளங்களில் அனுப்பப்பட்டு, நீங்கள் மோசடி வலையில் சிக்க நேரிடலாம். 


3. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தொடர்பு எண்ணைப் பெறவும்
மோசடி செய்பவர்கள் (Bank Fraud) பெரும்பாலும் வாடிக்கையாளர்களுக்கு தவறான வாடிக்கையாளர் சேவை எண்களைக் கொடுத்து, அவர்கள் தங்கள் வங்கி/காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியிடம் பேசுவதாக நம்பும்படி ஏமாற்றுகிறார்கள். வங்கி/காப்பீட்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று இந்த தொடர்பு எண்களை உறுதிப்படுத்துவது எப்போதும் சிறந்தது.


4. தெரியாத வேலை/இ-காமர்ஸ் தளங்களில் பணம் செலுத்த வேண்டாம்
பதிவு செய்யும் போது வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள், டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் போன்றவற்றைப் பெற மோசடி செய்பவர்கள் போலி போர்டல்களைப் பயன்டுத்துகின்றனர். அத்தகைய இணையதளங்களில் ஜாக்கிரதையாக இருங்கள். மற்றும் முக்கிய தகவல்களை அனைத்து இடங்களிலும் பகிர்வதைத் தவிர்க்கவும். 


ALSO READ | ATM Cash Withdrawal: இனி பணம் எடுக்க அதிகம் செலவாகும், புதிய கட்டணங்கள் இதோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR