புது டெல்லி: ரிசர்வ் வங்கி ஆன்லைன் பண பரிவர்த்தனைகளான RTGS) மற்றும் NEFT மீது விதிக்கப்பட்டு வரும் கட்டணத்தை அகற்றுவதாக அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தலைமையிலான நாணய கொள்கைக் கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. அப்பொழுது நாட்டின் பொருளாதாரத்தினை மந்த நிலையில் இருந்து புதுப்பிக்கவும் மற்றும் வருவாய்க்கான வளர்ச்சியை ஊக்குவிக்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடுவு செய்யப்பட்டது. இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற நிலையை இழந்து விட்டதை குறித்தும் விவாதிக்கப்பட்டது.


இந்த கூட்டத்தில் முக்கிய நடவடிக்கையாக குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டது. அதாவது ரெப்போ வட்டி விகிதம் 6%-லிருந்து  5.75%-மாக குறைத்துள்ளது. 


அதே நேரத்தில், ரிசர்வ் வங்கி ஆன்லைன் பண பரிவர்த்தனைகளான நிகழ்நேர பெருந்திரள் தீர்வு (RTGS) மற்றும் தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) மீது விதிக்கப்பட்டு வரும் கட்டணத்தை அகற்றுவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு நேரடி ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் நுகர்வோர்களுக்கு நன்மையாக இருக்கும். வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த நன்மை வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. 


அதாவது, தற்போது அரசு மற்றும் தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் IMPS மற்றும் RTGS பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது, அதற்கான சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கின்றன. 


அதில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) NEFT பரிவர்த்தனைக்கு ரூ.2.5 முதல் ரூ.25 வரை வசூலிக்கிறது. ஆன்லைன் மூலம் ரூ.10 ஆயிரம் வரை பண பரிவரத்தனைக்கு கட்டணமாக 2.5 ரூபாயும், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் 1 லட்ச ரூபாய் வரை கட்டணமாக ரூ.5 வசூலிக்கிறது. NEFT மூலம் ரூ. 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை செய்யப்படும் பணப் பரிவர்த்தனைக்கு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாட்டில் உள்ள மற்ற வங்கிகளும் வாடிக்கையாளர்களிடமிருந்து இதே கட்டணத்தை வசூலிக்கின்றன.