அசாம்: அசாம் அரசின் முதன்மை மற்றும் தலைமை கண்காணிப்பாளரின் அலுவலகத்தில் மருத்துவ கல்வி இயக்குநரகம் (டி.எம்.இ) 4 ஆம் நிலை பதவிகளில் 188 காலியிடங்கள் உள்ளன. இந்த பதவிகளுக்கு 8 வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆர்வமுள்ளவர்கள் dme.assam.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்துக்கு சென்று தெரிந்துக்கொள்ளலாம். 2020 மே 15 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்திற்கான கடைசி தேதி மே 30 ஆகும். பியுன், வார்டு ஆண்/ பெண், அட்டெண்டண்ட், ஸ்வீப்பர், குக், டஃப்டரி போன்ற பதவிகளுக்கு காலியிடங்கள் உள்ளன. 


காலியிடங்களில், வார்டு ஆண்/ பெண் பதவிக்கு 71 காலியிடங்கள், ஆய்வக உதவியாளர் 30, ஸ்வீப்பர் 15, சலவை பணி/ வாஷர்மேன் 12-12, உதவியாளர் 10, ஸ்ட்ரெட்சர் பியரரில் 8, பியூன் & பட்டறை தொழிலாளி 6-6, தப்தாரி, டிஸ்கவரி ஹால் உதவியாளர், குக் 4-4, விலங்கு உதவியாளர் 2-2 பேர் என காலியிடங்கள் உள்ளன.


இந்த பதவிகளுக்கான குறைந்தபட்ச வயது வரம்பு 18 மற்றும் அதிகபட்சம் 38 வயது என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 1 ஜனவரி 2020 முதல் வயது கணக்கிடப்படும். அரசாங்க விதிகளின்படி வயது தளர்த்தப்படும்.
 
ஊதிய அளவு - 12,000 + -52,000 + கிரேடு பே- 3900


அனைத்து பதவிகளுக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள், தங்கள் விரும்பும் பணியை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.