Relationship with in-law: திருமணமான பெண்கள் மாப்பிள்ளை வீட்டில் உள்ளவர்களிடம் நல்ல முறையில் பழக வேண்டும் என்று விரும்புவது வழக்கம். குறிப்பாக கணவரின் அம்மாவுடன் நல்ல உறவை அமைத்து கொள்வார்கள். முடிந்தவரை வீட்டில் எந்த பிரச்சனையும் ஏற்படாதவாறு பார்த்து கொள்வார்கள். பெண்கள் தங்கள் மாமியாருடன் நல்ல வலுவான உறவைப் பெற விரும்பினால் சில நுணுக்கங்களை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாகவே மாமியார் - மருமகள் உறவில் அதிக சண்டை வரும் என்றாலும், சில முறைகளில் சண்டைகள் வரலாம் தடுக்க முடியும். இதற்கு, மிக முக்கியமான விஷயம் பேசும் வார்த்தைகளில் தெளிவு இருக்க வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஊர் சுற்றினால் கிடைக்கும் பணத்தாலும் வாங்க முடியும் 10 அற்புதமான விஷயங்கள்..!


மனிதர்கள் தப்பு செய்வது உணவு. அதே போல சில சமயங்களில் நமக்கு தெரியாமலேயே சில வார்த்தைகள் மூலம் அடுத்தவர்களை புண்படுத்திவிடுகிறோம். இதுபோன்ற சூழ்நிலையில், உங்கள் மாமியாருடன் நீண்ட காலம் நல்ல உறவை மேற்கொள்ள பின்வரும் 5 விஷயங்களை பின்பற்றினால் நல்லது.


கணவரை பற்றி குறை சொல்ல கூடாது: உங்கள் மாமியாரிடம் உங்கள் கணவனை நீங்கள் வளர்த்த முறை சரி இல்லை என்று ஒருபோதும் விளையாட்டாக கூட சொல்ல கூடாது. அவர்கள் வளர்ப்பை விமர்சிப்பது உங்களை பெரிய சிக்கலில் தள்ளும். உங்கள் கணவரை கிண்டல் செய்ய நகைச்சுவையாக கூட இதுபோன்ற வார்த்தைகளை மாமியாரிடம் பயன்படுத்த வேண்டாம்.


என்னால் செய்ய முடியாது: உங்கள் மாமியார் சொல்லும் வேலைகளை என்னால் செய்ய முடியாது என்று விளையாட்டாக கூட சொல்ல வேண்டாம். ஒருவேளை அப்படி நீங்கள் சொன்னால் உங்கள் மாமியார் அதனை மரியாதை குறைவாக எடுத்து கொள்ள வாய்ப்புள்ளது. எனவே இது உறவில் விரிசலை ஏற்படுத்தும். உங்களால் அவர்கள் சொல்லும் வேலையை செய்யமுடிவில்லை என்றால் வேறு சில வழிகளில் எடுத்து கூறுங்கள்.


திரும்ப கேள்வி கேட்க வேண்டாம்: உங்கள் மாமியார் ஏதேனும் வேலை சொல்லும் பட்சத்தில் இதனை இப்போதே முடிக்க வேண்டிய தேவை என்ன என்பது போல் கேள்வி கேட்க வேண்டாம். அவர்கள் சொல்வதை எதிர்த்து கேள்வி கேட்பது அவமானகரமான தொனியில் உங்கள் உறவைக் கெடுக்கும்.


செல்லம் கொடுத்து கெடுக்க வேண்டாம்: உங்கள் கணவன் ஏதேனும் தவறு செய்யும் பட்சத்தில், உங்கள் மாமியாரிடம் நீங்கள் கொடுக்கும் செல்லம் தான் இதற்கு காரணம் என்பது போல் பேச வேண்டாம். இது உங்கள் மாமியாரின் உணர்வுகளை புண்படுத்தலாம்.


உங்கள் பெற்றோருடன் ஒப்பிட வேண்டாம்: உங்கள் மாமியாரை ஒருபோதும் உங்கள் பெற்றோருடன் ஒப்பிடாதீர்கள். ஏனெனில் அப்படி ஒப்பிட்டு பார்க்கும் போது சில சமயங்களில் அவர்கள் செய்யும் செயல்கள் உங்கள் காயப்படுத்தலாம். அதன் பிறகு, உங்கள் இருவருக்கும் இடையே உள்ள உறவு விரிசல் அடையலாம்.


மேலும் படிக்க | முதல் டேட்டில் மறக்கக் கூடாத 4 விஷயங்கள்... காதல் மலர இது ரொம்ப முக்கியம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ