குழந்தைகள் உங்கள் சொல்பேச்சை கேட்கவில்லையா? இத மட்டும் பண்ணுங்க போதும்!

உங்கள் குழந்தைகள் உங்கள் சொல்பேச்சை கேட்காமல் மிகவும் பிடிவாதமாக இருந்தால் சில விஷயங்களை நீங்கள் மாற்றி கொள்ள வேண்டும். இதன் மூலம் குழந்தைகள் பண்பாக இருப்பார்கள்.  

Written by - RK Spark | Last Updated : Jun 17, 2024, 07:20 AM IST
  • குழந்தை சொல்பேச்சை கேட்கவில்லை என்றால்....
  • பெற்றோர்கள் இந்த தந்திரத்தை பின்பற்ற வேண்டும்...
  • குழந்தைகள் பெற்றோரை சுற்றி சுற்றி வருவார்கள்.
குழந்தைகள் உங்கள் சொல்பேச்சை கேட்கவில்லையா? இத மட்டும் பண்ணுங்க போதும்! title=

பெற்றோர்களை பார்த்து தான் பிள்ளைகள் வளர்வார்கள் என்ற பழமொழி உண்டு. அதே போல பெற்றோரின் கோப குணமும் குழந்தைகள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தற்போதுள்ள 2கே கிட்ஸ் குழந்தைகள் மிகவும் பிடிவாதமாக உள்ளனர். அவர்கள் சொல்வது தான் சரி, நான் கேட்டது வேண்டும் என்று பெற்றோரை தொந்தரவு செய்கின்றனர். அதே சமயம் பெற்றோர்கள் என்ன சொன்னாலும் காது கொடுத்து கேட்பது இல்லை. வெகு சில குழந்தைகள் மட்டுமே பெற்றோர்கள் சொல்வதை ஒரே வார்த்தையில் கேட்கின்றனர். அதிக பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை சில சமயம் பெற்றோர்கள் திட்டி விடுகின்றனர். இதன் காரணமாக தனது பெற்றோர் தங்களை அதிகம் திட்டுகின்றனர் என்று நினைத்து கொள்கின்றனர்.

மேலும் படிக்க | முதல் டேட்டில் மறக்கக் கூடாத 4 விஷயங்கள்... காதல் மலர இது ரொம்ப முக்கியம்!

இது அடிக்கடி நடக்கும் பட்சத்தில் பெற்றோரின் வார்த்தைகளை புறக்கணிக்கத் தொடங்குகிறார்கள். குழந்தை வளர்ப்பில் எப்போதும் பெற்றோர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். பெற்றோரின் கோபமான குணம் மற்றும் செயல் அவர்களின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் சிறு வயதில் இருக்கும் போது பெற்றோர்கள் அவர்கள் கேட்டதை உடனே வாங்கி கொடுக்கின்றனர். இது அவர்கள் மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது. அவர்கள் வளர்ந்த பின்பும் இதே போல் கேட்டது கிடைக்கும் என்று எண்ணுகின்றனர். அந்த சமயத்தில் கிடைக்காதபோது கோபம் கொள்கின்றனர். இதனால் அதிக பிடிவாத குணம் ஏற்படுகிறது. உங்கள் குழந்தை பிடிவாதமாக இருந்தாலோ அல்லது உங்கள் சொல்பேச்சை கேட்கவில்லை என்றாலோ எப்படி சரி செய்வது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

குழந்தைகளிடம் நிதானமாக பேசுங்கள்

உங்கள் குழந்தை பிடிவாதமாக இருந்தால் அல்லது பேச்சைக் கேட்கவில்லை என்றால் கோவமாக கத்துவது ஒருபோதும் உதவாது. இதுபோன்ற சூழ்நிலைகளில் குழந்தைகளிடம் அன்பாக பேசுங்கள். அந்த சூழ்நிலையை விளக்க முயற்சி செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் குழந்தை உங்கள் பேச்சை கேட்க வாய்ப்புள்ளது. 

வாக்குவாதத்தை தவிர்க்க பாருங்கள்

வீட்டில் கணவன் - மனைவி இடையே சண்டை வருவது சகஜம் தான். ஆனால் குழந்தைகளின் முன்பு சண்டைபோடுவதை முடிந்தவரை தவிருங்கள். குழந்தைகள் அதிக நேரத்தை வீட்டில் தான் செலவு செய்கின்றனர். எனவே, அவர்கள் வளரும் சூழ்நிலையே அவர்களின் குணத்தையும் மாற்றுகிறது. எனவே பெற்றோர்கள் குழந்தையின் முன் சண்டையிட்டால், குழந்தையும் அதே மனநிலையுடன் வளர்கிறது. 

கால அட்டவனை

உங்கள் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க முதலில் வீட்டிலேயே சில விதிகளை உருவாக்குங்கள். சாப்பிடுவதற்கு, தூங்குவதற்கு, எழுவதற்கு, படிப்பதற்கு நேரத்தை பின்பற்ற கற்று கொடுங்கள். இதில் விளையாடுவதற்கும் தனி நேரம் ஒதுக்கி கொடுங்கள். இதனால் குழந்தைகள் ஈடுபாடுடன் ஒவ்வொரு விஷயத்தையும் செய்து முடிப்பார்கள். 

மேலும் படிக்க | ஊர் சுற்றினால் கிடைக்கும் பணத்தாலும் வாங்க முடியும் 10 அற்புதமான விஷயங்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News