முகேஷ் அம்பானி தலைமயிலான ஜியோ நிறுவனம் carry-forward your credit limit என்ற புதிய வசதியை கொண்டுவந்துள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (JIO) தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்நிலையில், போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு முகேஷ் அம்பானி தலைமயிலான ஜியோ நிறுவனம் carry-forward your credit limit என்ற புதிய வசதியை கொண்டுவந்துள்ளது. இந்த வசதி ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் சேவையில் பயனர்களுக்கு தற்போதுள்ள கிரெடிட் லிமிட்டை பெற அனுமதிப்போடு, எந்த விதமான செக்யூரிட்டி டெபாசிட்டுற்கும் வேலை இல்லாமல் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


அன்மையில் புதிய Jio போஸ்ட்பெய்ட் பிளஸ் இணைப்பைப் பெறும் பயனர்களுக்கு எவ்வாளவு பாதுகாப்பு வைப்புத் தொகையை (security deposit) செலுத்த வேண்டும் என்கிற விவரங்கள் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) வலைதளத்தில் வெளியானதற்கு பின்னர், ஜியோ நிறுவனம் இந்த புதிய நடவடிக்கையை செயல்படுத்தியது. இந்த புதிய அறிமுகத்தின் எதிரொலியாக, ஏற்கனவே கிரெடிட் லிமிட் கொண்டுள்ள போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர் Jio போஸ்ட்பெய்ட் பிளஸ்-க்கு மாறும் போது எந்த விதமான பாதுகாப்பு வைப்புத்தொகையும் செலுத்த தேவையில்லை. மேலும், அவர்களின் தற்போதைய கிரெடிட் லிமிட்டும் நுகர்வோருக்கு வழங்கும்.


ALSO READ | Jio மூடி மறைத்த இந்த கூடுதல் தொகை மேட்டர்; வெளியான உண்மை தகவல்


இந்த புதிய அம்சத்தை பெற போஸ்ட்பெய்ட் பயனர்கள் தங்கள் உபயோகிக்கும் போஸ்ட்பெய்ட் எண்ணிலிருந்து வாட்ஸ்அப் வழியாக 88501-88501 என்ற எண்ணுக்கு "Hi" என ஒரு SMS அனுப்ப வேண்டும். பின்பு தற்போதுள்ள கிரெடிட் லிமிட்டை உறுதிபடுத்த அவர்கள் இருக்கும் ஆபரேட்டரின் போஸ்ட்பெய்ட் பிளஸ்-யை பதிவேற்றுமாறு கேட்கும். அடுத்த 24 மணி நேரத்திற்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் எந்தவொரு ஜியோ ஸ்டோருக்கும் செல்வதின் வழியாக ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் சிம் கார்டை பெற முடியும் அல்லது வீட்டிற்க்கே கூட டெலிவரி செய்ய வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆனால் இந்த புதிய அம்சம் ஏற்கனவே உள்ள கிரெடிட் வரம்பைக் கொண்ட போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.