சாப்பிடும் பலர் தங்களது அவசரத்துக்காக நின்றுகொண்டே சாப்பிடுவார்கள். அதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்துவதாக நினைத்துக்கொள்ளும் அவர்களுக்கு உடலில் பல பிரச்னைகள் உருவாகின்றன. அவசரத்திற்கென இப்படி சாப்பிடுபவர்கள் ஒருபக்கம் இருந்தாலும் பல ஹோட்டல்களிலும் பலர் நின்றுகொண்டே சாப்பிடுகின்றனர். அதை தவிர்த்துவிடுவது நல்லது. அப்படி நின்றுகொண்டே சாப்பிட்டால் மன அழுத்தம் உருவாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதோடு நாவின் சுவை அரும்புகளும் பாதிப்புக்குள்ளாகும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாகவே நிற்கும்போது புவி ஈர்ப்பு விசையின் காரணமாக ரத்தம் கீழ் நோக்கி பாயும். நின்றுகொண்டே சாப்பிடும்போது உடலின் கீழ்ப்பகுதியில் இருந்து ரத்தம் மேல் நோக்கி செல்வதற்கு சிரமம். ரத்தத்தை மேல்நோக்கி எடுத்து செல்வதற்கு இதயம் சிரமப்பட வேண்டியிருக்கும். அதன் காரணமாக பிட்யூட்டரி சுரப்பியின் செயல்பாடுகளில் சீரற்ற தன்மை ஏற்படும். அது மன அழுத்தத்தை தூண்டும் ஹார்மோனான கார்டிசாலின் அளவை அதிகப்படுத்தும்.


மேலும் படிக்க | Heath Alert: டீயுடன் ‘சில’உணவுகளை எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு!


அதுமட்டுமின்றி ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுவதோடு உணவின் சுவையை அறியக்கூடிய உறுப்புகளின் உணர் நரம்புகள் பாதிப்புக்குள்ளாகும். நாளடைவில் உணவின் ருசியை அறியும் நாவின் சுவை நரம்புகளும் பாதிப்புக்குள்ளாகி ருசித்து சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுவிடும். 


மேலும் படிக்க | கொலஸ்ட்ராலை குறைக்கும் பேரீச்சம்பழம் செய்யும் மாயம்! ஆனால் இது மாயக்கனி அல்ல


சாப்பிடும்போது கால்களை மடக்கியவாறு தரையில் சம்மணம் போட்டு அமர்ந்து சாப்பிடுவதே சரியானது. இந்த ஆய்வுக்கு 350 பேர் உட்படுத்தப்பட்டனர். அவர்களில் நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டவர்களைவிட நின்று கொண்டு சாப்பிட்டவர்களின் செயல்பாடுகளில் சீரற்றதன்மை ஏற்பட்டது கண்டறியப்பட்டது.


மேலும் படிக்க | நடந்தே எடையை குறைக்கலாம்!! ஒரு நாளைக்கு எவ்வளவு நடக்க வேண்டும் தெரியுமா?


மேலும் படிக்க | Diabetes நோயாளிகளுக்கு ஏலக்காய் நீர் ஒரு வரப்பிரசாதம்: இதன் பிற நன்மைகள் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ