RBI's Action Against Fake Loan Apps: டிஜிட்டல் கடன் வழங்கும் துறையானது சமீப காலங்களில் பன்மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. எளிதாக கடனை பெற இதனை பயன்படுத்தும் பலர் மோசடியில் சிக்கி பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கடன் வழங்கும் சில மோசடி நிறுவனங்களும் இதன் மூலமாக பெரும் வளர்ச்சியை கண்டுள்ளதால், இதற்கு எதிராக நடவடிக்கைகளை தீரப்படுத்த ரிசர்வ வங்கி அவ்வப்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடி குறித்து மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி (RBI) தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது. இதைத் தடுக்க அவ்வப்போது தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடன் செயலிகளின் புதிய பட்டியல்


இப்போது இந்த வகையில், ஆன்லைன் ஸ்டோர்களில் இருந்து போலி கடன் செயலிகளை அகற்ற ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஒரு முக்கியமான விதியை உருவாக்க உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி கடன் செயலிகளின் புதிய பட்டியலை உருவாக்கியுள்ளது. இது விரைவில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். அதே பட்டியலின் அடிப்படையில், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகமும் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தை நடவடிக்கை எடுக்கக் கேட்கும் என்று கூறப்படுகிறது.


 போலி கடன் செயலிகள்


ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் நடக்கும் மோசடிகளைத் தடுக்க ரிசர்வ் வங்கி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஸ்மார்ட்போன்களில் உள்ள ஆன்லைன் ஸ்டோர்களில் இருந்து போலி கடன் செயல்பாடுகளை அகற்ற புதிய விதிகள் உருவாக்கப்படுகின்றன. உண்மையில், சில காலமாக ஆப் ஸ்டோரில் போலி கடன் செயலிகள் அதிகம் காணப்படுகின்றன. கூகுள் மற்றும் ஆப்பிளில் இருந்து இதுபோன்ற ஆப்களை நீக்குவதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. தவிர, கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களும் இதுபோன்ற செயலிகளில் விழிப்புணர்வை அதிகரிக்குமாறு கோரப்பட்டுள்ளன.


மேலும் படிக்க | EPFO ஜாக்பாட் அப்டேட்: வட்டி தொகை விரைவில் கணக்கில் வரும்... இப்படி ஈசியா செக் செய்யலாம்


100க்கும் மேற்பட்ட கடன் செயலிகள் முடக்கம்


தகவலின்படி, விரைவில் கூகுள் மற்றும் ஆப்பிள், ரிடர்வ் வங்கி பட்டியலிட்டுள்ள அனைத்து செயலிகளையும் ஆப் ஸ்டோர் அல்லது பிளே ஸ்டோரிலிருந்து அகற்றும். ஒரு அறிக்கையின்படி, கடந்த முறையும் அரசாங்கம் 100க்கும் மேற்பட்ட கடன் செயலிகளை முடக்கியது. 2023ம் நிதியாண்டில் டிஜிட்டல் கடன் வழங்கும் செயலிகளுக்கு எதிரான புகார்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து 1,062 ஆக உயர்ந்துள்ளது என்று நிதி அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் மக்களவையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இணைய மோசடி வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டில் 14,007 ஆக இருந்தது என்றும் இதில் டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பான கடன் மோசடிகளும் அடங்கும் என்றும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள தகவல்களில் கூறப்பட்டுள்ளது.


 டிஜிட்டல் கடன் செயலிகளை ஒழுங்குபடுத்தும் கட்டமைப்பு


சட்டவிரோத டிஜிட்டல் கடன் வழங்கும் செயலிகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில், டிஜிட்டல் கடன் செயலிகளை ஒழுங்குபடுத்துவதற்கான விரிவான சட்ட கட்டமைப்பை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி, செயலி வழியாக டிஜிட்டல் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் ஆகியவை, பிற நிறுவனங்களுடன் எந்தவொரு கூட்டாண்மை திட்டங்களை மேற்கொள்வதற்கு முன்னால், அந்த நிறுவனம் மத்திய ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறைகளை சரியாக பின்பற்றியுள்ளதா என்பதை அவசியம் சரிபார்க்க வேண்டும்.மேலும், வட்டி விகிதங்கள், அதனை வசூலிக்கும் முறை சரியாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.


மேலும் படிக்க | PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட் செய்தி: புதிய வதி விரைவில்.. கணக்கில் வரும் அதிக தொகை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ