சென்னை: நகைச்சுவை நடிகர் விவேக்கின் மரணம் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேரில் சென்று அஞ்சலி செலுத்துபவர்களின் கூட்டம் அவரது வீட்டில் கூடியிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் உட்பட பலரும் விருகம்பாக்கத்தில் உள்ள விவேக்கின் வீட்டிற்கு நேரடியாக சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பலரும் தங்கள் துக்கத்தை பகிர்ந்துக் கொள்கின்றனர். சமூக ஊடகங்களில் #RIPVivek என்ற ஹேஷ்டேக் வைரலாகிறது.


அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!
எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன்
அழவைத்துவிட்டுப் போய்விட்டானே!


திரையில் இனி பகுத்தறிவுக்குப்
பஞ்சம் வந்துவிடுமே!


மனிதர்கள் மட்டுமல்ல விவேக்!
நீ நட்ட மரங்களும் உனக்காக
துக்கம் அனுசரிக்கின்றன.


கலைச் சரித்திரம் சொல்லும் :
நீ ‘காமெடி’  கதாநாயகன்… 


என திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் சமூக ஊடங்களில் வைரலாகிறது.



Also Read | சின்ன கலைவாணர் நடிகர் விவேக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும்..


தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை நான்கு முறைபெற்றவர் நடிகர் விவேக்.



 
திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் விவேக்கின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.



 2009ல் பத்ம விருதும் அவரைத் தேடி வந்தது. பத்மஸ்ரீ விருது பெற்ற நகைச்சுவை நாயகன். பல பிரபலங்களும் நடிகர் விவேக்கிறகு சமூக ஊடகங்கள் மூலம் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



உலக நடிகர் கமலஹாசனின் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்கவிருந்தார் விவேக்.


Also Read | நேற்று தடுப்பூசி, இன்று மாரடைப்பு; நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR