கூகுள் கொடுக்கும் ரூ.25 லட்சம் பரிசு! நீங்களும் வெல்லலாம்
கூகுள் கொடுக்கும் 25 லட்சம் பரிசு தொகையை நீங்களும் வெல்லலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.
டிவிட்டர், பேஸ்புக், கூகுள், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் தங்களிடம் இருக்கும் தொழில்நுட்ப தவறுகளை ஆதாரத்துடன் துல்லியமாக சுட்டிக்காட்டுபவர்களுக்கு பெரும் வெகுமதியை கொடுத்து வருகின்றன. அந்த தொழில்நுட்பங்களில், அப்டேட்டுகளில், கோடிங்கில் இருக்கும் தவறுகளை நீங்கள் சுட்டிக் காட்டினால், அந்த நிறுவனங்கள் கொடுக்கும் பெரும் பரிசு தொகையை நிச்சயம் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | வீடு வாங்கும்போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்
இது தொடர்பாக பிரத்யேக குழு ஒன்றையே வைத்திருக்கிறது கூகுள் நிறுவனம். அந்த குழு கூகுள் நிறுவனத்தின் தொழில்நுட்பங்களில் இருக்கும் குளறுபடிகளை கண்டறிந்து சரி செய்வதையே முழுநேர பணியாக வைத்திருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்களால்கூட கண்டுபிடிக்க முடியாத சில குளறுபடிகள், தவறுகள் இருக்கும். அதனை நீங்கள் கண்டுபிடித்தால் பிக் பவுண்டி பரிசை நீங்கள் வெல்லலாம்.
கூகுளின் பிக் பவுண்டி எனப்படுவது, பிழைகளை கண்டறிந்து கூறுபவர்களுக்கு கொடுக்கப்படும் மிகப்பெரிய வெகுமதியாகும். இந்த பிக் பவுண்டி திட்டத்தின் கீழ் உலகம் முழுவதும் கூகுளின் தவறுகளை கண்டறிந்து ஆதாரத்துடன் விளக்குபவர்களுக்கு பரிசு தொகைகள் வழக்கப்பட்டு வருகின்றன. தவறுகளின் மதிப்பை பொறுத்து வெகுமதி எண்ணிக்கையும் மாறுபாடு அடையும். அமெரிக்க டாலர் மதிப்பில் சுமார் 8 லட்சம் ரூபாய் முதல் 25 லட்சம் வரை பரிசு தொகையாக வழங்கப்படுகிறது. உங்களாலும் கூகுள் தொழில்நுட்பத்தில் இருக்கும் தவறுகளை கண்டுபிடித்து ஆதாரத்துடன் விளக்க முடியும் என்றால், நிச்சயம் நீங்களும் 25 லட்சம் ரூபாய் கூகுள் பரிசு தொகையை வெல்ல முடியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ