அலுவலகத்திற்கு குட்டை பாவாடை அணிந்து வரும் பெண் ஊழியர்களுக்கு அதிக சம்பளம்வழங்குவதாக தனியார் நிறுவனம் அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் பல விசித்திரமான நிகழ்வுகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றனர். அதில், சில சம்பவம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும், இன்னும் சில சிரிப்பில் ஆழ்த்தும். இந்நிலையில், தனியார் நிறுவனம் ஒன்று தனது அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் பணிக்கு வரும் போது குட்டை பாவாடை அணிந்து வந்தால் அவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


ரஷ்யாவில் அலுமினியம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இந்த ஜூன் 30 ஆம் தேதி வரை "பெமினிட்டி மாரத்தான்" என்ற கேம்பெயினை நடத்தி வருகிறது. இந்த கேம்பெயினில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இதில் பெண்கள் பணிக்கு வரும் போது அவர்களது முட்டிக்கு 5 சென்டி மீட்டருக்கு கீழே இறங்காத அளவிலான ஸ்கட் அணிந்து வந்தால் அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க அந்நிறுவனம் முன் வந்துள்ளது. 


30 நாட்கள் நடக்கும் இந்த கேம்பெயினில் ஒவ்வொரு நாளும் இவ்வாறான ஆடைகள் அணிந்து வந்தால் அவர்களுக்கு 100 ரஷ்ய ரூபெல் ( இந்திய மதிப்பில் ரூ.106.11) பணத்தை அந்நிறுவனம் வழங்குகிறது. இந்த கேம்பெயின் மூலம் பெண்கள் உடைகள் அணிவதில் மன தடுமாற்றத்தை போக்குவது, உடைகளில் பெண்கள் வெட்கப்பட வேண்டியது இல்லை என்பதை உணர வைக்க இது நடத்தப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 


ஆனால், நிறுவனத்தின் இந்த நடைமுறைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெண்களை குறைவான ஆடை அணியவைத்து அதற்கு அந்நிறுவனம் பணம் வழங்குவது மிக கீழ் தரமான செயல் என பலர் அந்நிறுவனத்தின் இந்நடவடிக்கையை வன்மையாக கண்டித்துள்ளனர்.