இளம்பெண்கள் இருவர் நடத்தும் பிரபல முடிதிருத்தம் செய்யும் கடையில் கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கள் சவரம் செய்துக்கொண்டு உள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குடும்ப வருமையை போக்கவும், உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தையின் உயிரை காக்கவும் உபி-யை சேர்ந்த இளம்பெண்கள்,  ஆண் வேடமிட்டு முடிதிருத்த கடை ஒன்றை கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகின்றனர்.


உத்திரபிரதேச மாநிலத்தை சேரந்த ஜோதி குமாரி(18), நேஹா(16) என்னும் இரு இளம்பெண்கள், ஆண்களை போல் வேடமணிந்து கடந்த நான்கு ஆண்டுகளாக முடிதிருத்தம் கடை நடத்தி வருகின்றனர். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களது தந்தை உடல்நலம் நலிவுற்று மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.


இதனால் அவர் நடத்திவந்த முடிதிருத்தம் கடையும் முடங்கியுள்ளது. குமாரி, நேஹா-வின் குடும்பத்திற்கு இருந்த ஒரே வருமாண மூலம் இந்த முடிதிருத்த கடை தான் என்பதாலும், தந்தையின் மருத்துவ செலவிற்கு பணம் தேவை என்பதாலும், தங்களது பெண் என்னும் சமூக அடையாளத்தை மாற்றிக்கொண்டு தந்தையின் முடிதிருத்த கடையினை செயல்படுத்தி வருகின்றனர். 


தீபக் மற்றும் ராஜூ என பெயர் மாற்றிக்கொண்டு முடிதிருத்த கடையினை நடத்தி வரும் குமாரி, நேஹா குறித்து அப்பகுதியில் இருக்கும் 100 குடியிருப்பு வாசிகளுக்கு மட்டுமே இவர்கள் பெண்கள் என தெரியும்,. வெளியூரில் இருந்து வந்து முடிதிருத்தம் செய்து செல்லும் நபர்களுக்கு இவர்கள் இருவரும் தீபக் மற்றும் ராஜூ தான்.


தினமும் 400- 500 வரை வருமாணம் ஈட்டும் இச்சகோதரிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக பிற்பகல் மட்டுமே கடையை நடத்தி வருகின்றனர். காலை வேலையில் தங்களது படிப்பினை தொடர்வதாக அவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர். 



இந்நிலையில் தற்போது இவர்களது கடைக்கு சென்ற சச்சின் டெண்டுல்கர் அவர்களது கடையில் சவரம் செய்துக்கொண்டு உள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிடுகையில்., இதற்கு முன் மற்றவர்களிடத்தில் நான் சவரம் செய்துக் கொண்டதில்லை. ஆனால் தற்போது செய்துக்கொண்டேன். மேலும் இந்த ஊக்கப்பூர்வமான சகோதரிகளுக்கு Gillette நிறுவனத்தின் உதவி தொகை அளித்தமைக்கு பெருமை படுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.